அ.ம.மு.க. பிரமுகர் கொலை வழக்கில் நான்கு பேரை காவலில் எடுத்து விசாரணை.

372

அ.ம.மு.க. பிரமுகர் கொலை வழக்கில் நான்கு பேரை காவலில் எடுத்து விசாரணை.

அ.ம.மு.க. பெரம்பலூர் நகர மாணவரணி செயலாளர் பாண்டி (எ) வல்லத்தரசு. இவரைசிலர் அரிவாளால் வெட்டிக்கொலை செய்தனர். இதில் அவருடை நண்பர் சூர்யாவையும் அந்த கோஷ்டியினர் ஆயுதங்களால் சரமாரியாக தாக்கினர். இதில் பலத்தகாயம் அடைந்த சூர்யா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

காயமடைந்து சிகிச்சையில் இருக்கும் சூர்யா அளித்த புகாரின் பேரில், பெரம்பலூர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சுப்பையா வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார். இதனிடையே கரூர் மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் பெரம்பலூர் சங்குப்பேட்டையை சேர்ந்த பத்மநாபன் என்பவரது மகன் பிரகாஷ்(24), செல்வக்குமார் மகன் விஜயராஜ்(30), ரெங்கசாமி மகன் ராஜா(34), கார்த்திக்(30) ஆகியோர் கடந்த 4-ந் தேதி சரண் அடைந்தனர்.

[the_ad id=”7251″]

இந்த கொலை வழக்கில் முருகேசன் மற்றும் மகேஷ் ஆகியோரை பெரம்பலூர் போலீசார் கைது செய்தனர். கரூர் நீதிமன்றத்தில் சரண் அடைந்த 4 பேரும் பெரம்பலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர். இவர்கள் 4 பேரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த நீதிபதி உத்திரவிட்டார். அதனை தொடர்ந்து 4 பேரிடமும் பெரம்பலூர் காவல்துறையினர்  விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த விசாரணையில், கொலை செய்யப்பட்ட வல்லத்தரசுவிற்கும், அதே பகுதியை சேர்ந்த மற்றொரு கோஷ்டிக்கும் இடையிலான பிரச்சனையால் வல்லத்தரசு கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது தெரியவந்தது.

[the_ad id=”7250″]




Leave a Reply

%d bloggers like this: