பெரம்பலூரில் கொள்ளையடிக்க திட்டம் தீட்டியதாக ஐந்து பேர் கைது.

549

பெரம்பலூரில் கொள்ளையடிக்க திட்டம் தீட்டியதாக ஐந்து பேர் கைது.

பெரம்பலூர் எளம்பலூர் சாலையில் காவல் ஆய்வாளர் சுகந்தி (பொறுப்பு) தலைமையில் துணை காவல் ஆய்வாளர் செந்தமிழ்ச்செல்வி மற்றும் காவலர்கள் வாகனத்தில் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டபோது உப்போடை அருகில் கூட்டாக அமர்ந்து பேசிக் கொண்டிருந்தவர்கள் போலீஸ் வாகனத்தை கண்டு ஓட முயற்சி செய்தனர்.

இதையடுத்து காவலர்கள் அவர்களை பிடித்து கைது செய்தனர். இதில் பெரம்பலூர் சங்கு பேட்டை சேர்ந்த செல்வகுமார் (வயது 30), மணிகண்டன் (வயது 31), இந்திரா நகரை சேர்ந்த பிரசாந்த் (வயது 23) சந்தோஷ்குமார் (வயது 23) மற்றும் பாரதிதாசன் நகரை சேர்ந்த உமா மகேஸ்வரன் (வயது 45) ஆகிய 5 பேரிடமும் போலீசார் நடத்திய விசாரணையில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள இந்த காலத்தில் வேலை இல்லாத காரணத்தினால் ஏதேனும் வீடு அல்லது கடைகளில் கொள்ளை அடிக்கலாம் என திட்டம் தீட்டினார்கள் என்பது தெரியவந்தது. மேலும் அவர்களிடம் இருந்து 2 அரிவாளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

[the_ad id=”12149″]

பின்னர் இது சம்பந்தமாக பெரம்பலூர் காவலர்கள் 5 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து 5 போரையும் பெரம்பலூர் குற்றவியல் நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு 15 நாள் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

[the_ad id=”7251″]
Leave a Reply

%d bloggers like this: