நெடுஞ்சாலைத்துறை அலுவலர்களை விவசாயிகள் முற்றுகை

பெரம்பலூரில் நெடுஞ்சாலைத்துறை அலுவலர்களை விவசாயிகள் முற்றுகை.

277

பெரம்பலூரில் நெடுஞ்சாலைத்துறை அலுவலர்களை விவசாயிகள் முற்றுகை.

Perambalur News: Farmers blockade highway officials in Perambalur.

பெரம்பலூர் நகரில் ஏற்பட்டு வரும் கடும் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தும் வகையிலும் நீண்ட தூரப் போக்குவரத்து வாகனங்கள், கனரக வாகனங்கள் போக்குவரத்துக்கு இடையூறின்றி எளிமையாக செல்லும் வகையிலும் பெரம்பலூர் நகரைச் சுற்றி புறவழிச்சாலை அமைக்க அரசு முடிவு செய்தது.

இதன்படி நெடுஞ்சாலைத்துறை திட்டங்கள் அலகு மூலம் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் எளம்பலூர் தண்ணீர் பந்தல் பகுதியிலிருந்து, பெரம்பலூர்-ஆத்தூர் சாலையில் கோனேரிப்பாளையம் வரையிலும், பெரம்பலூர்-துறையூர் சாலையில் செஞ்சேரி வரையிலும் என துறையூர் சாலையை இணைக்கும் வகையிலும் 2 கட்டங்களாகப் புறவழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது.

Perambalur News:

இதன் அடுத்தகட்டமாகப் பெரம்பலூர்-துறையூர் சாலையில் செஞ்சேரியிலிருந்து திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறுவாச்சூரை இணைக்கும் வகையில் ரெங்கநாதபுரம் வழியாக 7 கிமி தூரம் புறவழிச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டு, சாலை அமைப்பதற்கான நிலம் கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில் புறவழிச்சாலை அமைப்பதற்காக கண்டறியப்பட்ட நிலத்தினை அளந்து கல் ஊன்றும் பணி நேற்று துவங்கியது. இதையறிந்த ஐம்பதுக்கும் மேற்பட்ட விவசாயிகள், தங்களுக்கு எந்தவித முன்னறிவிப்பு கடிதமும் வழங்காமல், தங்களது நிலத்தில் கல் ஊன்றி அளப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து நெடுஞ்சாலைத்துறை அலுவலர்களை முற்றுகையிட்டனர்.

Tamil News:

இதனால் முறையாக நோட்டீஸ் வழங்கி கால அவகாசம் அளித்துவிட்டுப் பின்னர் பணியை தொடங்குவது என முடிவெடுக்கப்பட்டது.

இந்த முற்றுகையால் பணியை கைவிட்டு விட்டு நெடுஞ்சாலைத்துறையினர் தங்களது அலுவலகம் திரும்பினர். இந்த முற்றுகையால் அப்பகுதியில் சுமார் ஒருமணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

source: dinakaran

tag; Perambalur News, Perambalur news today, Perambalur today news, Perambalur district news.
Leave a Reply

%d bloggers like this: