பெரம்பலூர் அருகே மின்மோட்டார் திருட்டு 4 பேர் கைது.

பெரம்பலூர் அருகே மின்மோட்டார் திருட்டு 4 பேர் கைது.

437

பெரம்பலூர் அருகே மின்மோட்டார் திருட்டு 4 பேர் கைது.


Perambalur news: 4 arrested for electric motor theft near Perambalur.

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே வெண்பாவூர் கிராமத்தில் நேற்று அதிகாலை 4 மணிக்கு, மின்மோட்டார் திருட்டில் ஈடுபட்ட 4 பேரை காவலர்களிடம் பொதுமக்கள் ஒப்படைத்தனர்.

பிடிபட்ட 4 பெரும் தொடர்ந்து அப்பகுதியில் மின்மோட்டார் திருட்டில் ஈடுபட்டு வந்த தகவலறிந்து சுற்று வட்ட கிராமங்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் வெண்பாவூர் கிராமத்தில் திரண்டனர். இதனால் அப்பகுதியில் பதட்டமான சூழல் உண்டானது.

இதுகுறித்து தகவலறிந்த மங்களமேடு டிஎஸ்பி தேவராஜன் அவர்களின் உத்தரவின் பேரில் கை.களத்தூர் காவல் ஆய்வாளர் கலா மற்றும் துணை காவல் ஆய்வாளர் மோகன் ராஜ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

காவலர்களின் சமரச முயற்சியால் பொதுமக்கள் 4 திருடர்களை காவலர்களிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த காவலர்கள், அவர்களை கைது செய்து அவர்களிடமிருந்து மின்மோட்டார் மற்றும் திருட்டுக்கு பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

tags: perambalur news, perambalur news today, perambalur district, perambalur theft, tamil news
Leave a Reply

%d bloggers like this: