மாற்றுத்திறனாளிகள்

பெரம்பலூரில் மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.

176

பெரம்பலூரில் மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.

Perambalur News: Disabled People’s protest in Perambalur.

பெரம்பலூர் நகராட்சி அலுவலகம் முன்பாக மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. பெரம்பலூர் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பாகக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

Perambalur News:

ஊரடங்கு வேலையிழப்பு வாழ்வாதார நிதியாக மாதந்தோறும் ரூ 5ஆயிரம் வழங்கவேண்டும். 100 நாள் வேலையை அனைத்து மாற்றுத் திறனாளிகளுக்கு வேலையுடன் முழு ஊதியம் என்ற சட்டத்தை அமல்படுத்த வேண்டும். 100 நாள் வேலைத்திட்டத்தை 200 நாட்களாக உயர்த்தி நகராட்சி, பேரூராட்சிகளுக்கு விரிவு படுத்த வேண்டும். அனைத்து சமூகப்பாதுகாப்பு திட்டத்திலும் மற்றவர்களைவிட சட்டப்படி 25 சதவீதம் கூடுதல் நிவாரணம் வழங்க வேண்டும். தமிழக அரசு அறிவித்துள்ள நிவாரணம் ஆயிரத்தை அனைத்து வகையான மாற்றுத்திறனாளிகளுக்கும் விடுபடாமல் வழங்கவேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பாக நாடு தழுவிய அளவில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. பெரம்பலூர் நகராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்குச் சங்கத்தின் மாவட்டத் தலைவர் பழனிச்சாமி தலைமை வகித்தார். லெப்பைக்குடிக்காடு சாகுல் ஹமீது, கிருஷ்ண சாமி, பெருமாள், சுதாகர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

tag: perambalur news, perambalur today news, perambalur news today, perambalur district news,

Gulf Tamil News
Leave a Reply

%d bloggers like this: