போக்குவரத்து ரத்தால் வெறிச்சோடிய பெரம்பலூர். Traffic cancellation

போக்குவரத்து ரத்தால் வெறிச்சோடிய பெரம்பலூர்.

227

போக்குவரத்து ரத்தால் வெறிச்சோடிய பெரம்பலூர்.

Perambalur, which was found deserted due to traffic cancellation.

பெரம்பலூர், துறைமங்கலத்தில் 93 அரசு பேருந்துகள் இயக்கப்படாததால் பேருந்து நிலையங்கள் வெறிச்சோடியது.

கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் கடந்த மார்ச் மாதம் 24-ம் தேதி முதல் 144 ஊரடங்கு உத்தரவினைப் பிறப்பித்தன. இதனால் பேருந்து போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. 68 நாட்கள் நிறைவடைந்த நிலையில் ஜூன் 1-ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவில் விதிகளைத் தளர்த்திப் பேருந்துகள் இயக்க தமிழக அரசு உத்தரவிட்டது.

இதனைத் தொடர்ந்து பெரம்பலூர் துறைமங்கலத்தில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பணிமனையிலிருந்து (டெப்போ) அரசு உத்தரவுப்படி மொத்தமுள்ள 93 பேருந்துகளில், 50 சதவீத உண்ணிக்கையிலான 47 பேருந்துகள் இயக்கப்பட்டன.

பெரம்பலூர் அருகே கிணற்றில் குளித்த மாணவர் நீரில் மூழ்கி பலி.

இந்நிலையில் கொரோனா அதிகளவில் பரவலை கட்டுப்படுத்த கடந்த 25-ம் தேதி முதல் மாவட்டத்திற்குள் மட்டும் பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. ஆனால் சென்னையைப் போல் தமிழகமெங்கும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்ததால் நேற்று (1-ம் தேதி) முதல் வரும் 15ம் தேதி வரை மீண்டும் பேருந்து போக்குவரத்தைத் தமிழக அரசு முடக்கி உத்தரவிட்டது.

இதனால் பெரம்பலூர், துறைமங்கலம் அரசுப் போக்குவரத்து கழக பணிமனையில் இருந்து இயக்கப்படும் புறநகர் பேருந்துகள், நகரப்பேருந்துகள் என மொத்தமுள்ள 93 பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எனவே பெரம்பலூர் புது பேருந்துநிலையம், பழைய பேருந்து நிலையம் இரண்டுமே பயணிகள் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டன. தனியார் பேருந்துகளும் தங்கள் இடத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

tags: perambalur, tamil news
Leave a Reply

%d bloggers like this: