மத்திய அரசை கண்டித்து பெரம்பலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டம்.

172

மத்திய அரசை கண்டித்து பெரம்பலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டம்.

பெரம்பலூர் மாவட்ட பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் சார்பில் மத்திய அரசை கண்டித்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

டெல்லி, உத்திரப்பிரதேச மாநிலங்களில் இந்திய குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக போராட்டங்கள் நடத்திய முஸ்லிம் அமைப்பு தலைவர்கள், மாணவ செயல்பாட்டாளர்கள், மனித உரிமை காப்பாளர்கள் மீது தேசத்துரோக சட்டத்தின் கீழ் மத்திய அரசு வழக்கு பதிவு செய்துள்ளதை கண்டித்தும், அரசியல் பழிவாங்குதலை நிறுத்தக்கோரியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

[the_ad id=”7251″]

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பாப்புலர் பிரண்ட் மாவட்ட தலைவர் அபுபக்கர் சித்திக் தலைமை தாங்கினார். இதில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாவட்ட செயலாளர் ஷாஜகான் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசை கண்டித்து பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வினியோகம் செய்யப்பட்டது.

பெரம்பலூர் மாவட்டத்தில் வி.களத்தூர், லப்பைக்குடிகாடு, சத்திரமனை, விஜயகோபாலபுரம் உள்பட ஏறத்தாழ 20 இடங்களில் சமூக இடைவெளியை பின்பற்றி ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

[the_ad id=”12149″]

 

[the_ad id=”7252″]
Leave a Reply

%d bloggers like this: