பெரம்பலூர் அருகே வாகனத்தில் அடிபட்டு மான் பலி.Deer death

பெரம்பலூர் அருகே வாகனத்தில் அடிபட்டு புள்ளிமான் பலி.

229

பெரம்பலூர் அருகே வாகனத்தில் அடிபட்டு புள்ளிமான் பலி.

Deer death in vehicle accident near Perambalur.

நேற்று அதிகாலை 5 மணிக்கு, பெரம்பலூர் மாவட்டம் திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில், திருமாந்துறை சுங்கச்சாவடி அருகே சாலையை கடந்த மான், அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் 3 வயதுடைய ஆண் புள்ளிமான் முகத்தில் பலமாக அடிபட்டு துடிதுடித்து பலியானது. Deer death

தகவலறிந்த பெரம்பலூர் மாவட்ட வன அலுவலர் இளங்கோவன், பெரம்பலூர் வனச்சரகர் சசிக்குமார் ஆகியோர் உத்தரவின்படி, வனக்காப்பாளர் பொன்னுசாமி, வனக்காவலர் பவுல்தாஸ் உள்ளிட்டோர் மானின் சடலத்தை மீட்டு வி.களத்தூர் கால்நடை மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்த பிறகு, ரஞ்சன்குடி வனப்பகுதியில் புதைத்தனர்.

போக்குவரத்து ரத்தால் வெறிச்சோடிய பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டத்தில் வெண்பாவூர், பாண்டகப்பாடி, காரியனூர், அய்யனார் பாளையம், அரசலூர், இரட்டைமலை சந்து, குரும்பலூர், சித்தளி, பேரளி, ரஞ்சன்குடி வனப்பகுதிகளில், 500க்கும் மேற்பட்ட அரியவகை புள்ளிமான்கள் வசித்து வருகின்றன.

இவை கடும் வறட்சி காரணமாக உணவு, தண்ணீர், தட்டுப்பாடு ஏற்படுவதால் வனங்களை விட்டு, வணங்களுக்கு அருகேயுள்ள வயல்களுக்கும், கிராமங்களுக்கும் வருவதுண்டு. சாப்பாடு வரும்போது தவறி கிணற்றில் விழுந்தும், சாலைகளைக் கடக்கும் போது வாகனங்கள் மோதியும், கிராமங்களில் நுழையும் பொது தெருநாய்கள் துரத்தி கடிப்பதாலும், இந்த பிரச்சனைகளுக்கு வனத்துறையினர் நிரந்தர தீர்வு காணாமல் இருப்பதாலும் தொடர்ந்து மான்கள் வாகனத்தில் அடிபட்டு பலியாகி வருகின்றன.

இதற்கான நிரந்தர தீர்வை வனத்துறையினர் எடுத்து இது போன்று தொடர்ந்து மான்கள் பலியாவதை தடுக்க வேண்டும் என்பதே அனைவரின் வேண்டுகோளாக உள்ளது.

tags: perambalur, tamil news
Leave a Reply

%d bloggers like this: