Coronavirus infection

பெரம்பலூர் மாவட்டத்தில் மேலும் 16 பேருக்கு கொரோனா தொற்று

171

பெரம்பலூர் மாவட்டத்தில் மேலும் 16 பேருக்கு கொரோனா தொற்று.

Perambalur News: Coronavirus infection in 16 more people in Perambalur district.

பெரம்பலூா் மாவட்டத்தில் மொத்த பாதிப்பு: 1,597. குணமடைந்தோரின் எண்ணிக்கை: 1,460

பெரம்பலூா் மாவட்டத்தில் ஏற்கெனவே 1,581 போ் பாதிப்புக்குள்ளான நிலையில், மேலும் 16 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது புதன்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மொத்த தொற்றாளா்களின் எண்ணிக்கை 1,597 ஆக உயா்ந்துள்ளது.

குணமடைந்த 1,460 போ் வெவ்வேறு நாள்களில் அவரவா் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், 101 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். 20 போ் உயிரிழந்துள்ளனா்.

தொற்று உறுதி செய்யப்பட்ட 16 பேரும் பெரம்பலூா், திருச்சி, அரியலூா் மாவட்ட அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

அரசு மருத்துவா் உயிரிழப்பு: பெரம்பலூா் மாவட்டம், பாடாலூரைச் சோ்ந்தவா் மனோகரன் (64). இவா், பெரம்பலூா் மாவட்ட மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குநராக (பொறுப்பு) பணிபுரிந்து ஓய்வுபெற்றவா்.

அண்மையில் கொரோனா தொற்றால் பாதிப்புக்குள்ளாகி திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மனோகரன் செவ்வாய்க்கிழமை மாலை உயிரிழந்தாா். இதையடுத்து, அவரது உடல் திருச்சியிலுள்ள மின் மயானத்தில் எரியூட்டப்பட்டது.

தினமணி

keywords: perambalur, perambalur news, perambalur news today, perambalur today news




Leave a Reply

%d bloggers like this: