பெரம்பலூர் மாவட்டத்தில் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.

பெரம்பலூர் மாவட்டத்தில் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி. 

163

பெரம்பலூர் மாவட்டத்தில் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.

Perambalur News: Coronavirus confirmed 3 persons in Perambalur district.

பெரம்பலூர் மாவட்டத்தில் மேலும் மூன்று பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் இருவர்கள் உள்பட 3 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

ஏற்கனவே பெரம்பலூர் மாவட்டத்தில் 170 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பெரம்பலூர், திருச்சி, அரியலூர் சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் சிகிச்சை பெற்ற வந்தனர். இவர்களில் குணமடைந்து 158 பேர் வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். மீதமுள்ள 12 பேர் பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள கொரோனா சிறப்புப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற வருகின்றனர். இந்நிலையில் சென்னை சென்று வந்த பெரம்பலூர் மவாட்டத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களாக பணிபுரிந்து வரும், வேலூர் கிராமத்தைச் சேர்ந்த 29 வயது இளைஞர், திருச்சி மாவட்டம் கீரம்பூரைச் சேர்ந்த 31 வயது இளைஞர் ஆகியோருக்கும், பெரம்பலூர் மாவட்டம் வேப்பூரை சேர்ந்த 26 வயது இளைஞருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது.

Perambalur News:

இதை தொடர்ந்து மேற்கண்ட மூன்று பேரும், பெரம்பலூர் மாவட்ட அரசுத்தலைமை மருத்துவமனையில் உள்ள கொரோனா சிறப்பு பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற வருகின்றனர். இதன் மூலம் பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 173 ஆக உயர்ந்துள்ளது. சிகிச்சை பெற்ற 158 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில், 15 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

tag: perambalur news, perambalur today news, perambalur news today, perambalur district news,

Gulf Tamil News
Leave a Reply

%d bloggers like this: