பெரம்பலூரில் கிராம நிர்வாக அதிகாரிக்கு கொரோனா அலுவலகம் மூடல்.

பெரம்பலூரில் கிராம நிர்வாக அதிகாரிக்கு கொரோனா அலுவலகம் மூடல்.

528

பெரம்பலூரில் கிராம நிர்வாக அதிகாரிக்கு கொரோனா அலுவலகம் மூடல்.


Perambalur news: Corona for village administration officer.

பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா வைரசால் ஏற்கனவே மொத்தம் 175 பேர் பாதிக்கப்பட்டிருந்ததில், சித்த மருத்துவர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 161 பேர் சிகிச்சை பெற்று மருத்துவமனைகளில் இருந்து வீடு திரும்பி இருந்தனர். perambalur district

இந்நிலையில் ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஆலத்தூர் தாலுகா காரை பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த 47 வயது விவசாயியை தொடர்ந்து, அவரது 19 வயது மகனுக்கு நேற்று கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதே போல் துபாயில் இருந்து திரும்பி வந்த வேப்பந்தட்டை தாலுகா ரஞ்சன்குடி காந்தி நகரை சேர்ந்த 20 வயது ஆண் ஒருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். perambalur news today

பெரம்பலூர் தெற்கு கிராம நிர்வாக அதிகாரியான, கல்யாண் நகரை சேர்ந்த 33 வயது ஆண் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் கிராம நிர்வாக அதிகாரி அலுவலகம் மூடப்பட்டுள்ளது. அவர் சென்று வந்த பெரம்பலூர் தாசில்தார் அலுவலகத்தில் 3 நாட்களுக்கு பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட கிராம நிர்வாக அதிகாரி உள்பட 3 பேரும் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கிராம நிர்வாக அதிகாரிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட விவரம் சென்னை சுகாதாரத்துறையினரால் இன்று (செவ்வாய்க்கிழமை) அறிவிக்கப்படலாம் என்று மாவட்ட சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.

மேலும் பெரம்பலூர் மாவட்டத்தில் 125 பேரின் சளி மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. அலுவலகம் மூடல்

tags: perambalur news, perambalur news today, perambalur district, tamil news
Leave a Reply

%d bloggers like this: