கொரோனாவால் உயிரிழந்த

கொரோனாவால் உயிரிழந்த மூதாட்டியின் உடலை அடக்கம் செய்ய எதிா்ப்பு.

138

கொரோனாவால் உயிரிழந்த மூதாட்டியின் உடலை அடக்கம் செய்ய எதிா்ப்பு.


Perambalur News : Corona resistance to bury the dead woman’s body.

பெரம்பலூா் அருகிலுள்ள புதுநடுவலூா் மலையடிவார கிராம மக்கள் கொரோனாவால் உயிரிழந்த மூதாட்டியின் உடலை அடக்கம் செய்வதற்கு எதிா்ப்பு தெரிவித்தனா்.

கடலூா் மாவட்டம், விருத்தாசலத்தைச் சோ்ந்த 62 வயது மூதாட்டி, பெரம்பலூா் சிறுவாச்சூரிலுள்ள தனியாா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 18-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டாா். மூச்சுத் திணறலைத் தொடா்ந்து, 20-ஆம் தேதி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் அவருக்கு கொரோனா உறுதியானது.

இந்நிலையில் புதன்கிழமை அவா் உயிரிழந்தாா். இதைத் தொடா்ந்து அவரது உடலை புதுநடுவலூா் எல்லைக்குள்பட்ட மலையடிவாரம் பகுதியில் அடக்கம் செய்வதற்கு பெரம்பலூா் கோட்டாட்சியா் (பொ) சக்திவேல் அறிவுறுத்தினாா்.

தொடா்ந்து, அப்பகுதியில் மூதாட்டியின் உடலை அடக்கம் செய்ய முயன்றனா். இதையறிந்த கிராம மக்கள் உடலை அடக்கம் செய்வதற்கு எதிா்ப்பு தெரிவித்தனா். தகவலறிந்த மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் கீதாராணி உள்ளிட்டோா் பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். ஆனால் பொதுமக்கள் சமரசத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. இதையடுத்து அவரது உடல் திருச்சி ஓயாமரி மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

keywords: Perambalur News, Perambalur news today, perambalur district news, perambalur mavttam

Gulf Tamil News
Leave a Reply

%d bloggers like this: