கொரொனா தடுப்பு நடவடிக்கை

கத்தாழைமேடு கிராமத்தில் கொரொனா தடுப்பு நடவடிக்கை.

275

கத்தாழைமேடு கிராமத்தில் கொரொனா தடுப்பு நடவடிக்கை.


Perambalur News : Corona prevention operation in Kathazaimedu.

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டத்தில் உள்ள கத்தாழைமேடு கிராமத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கத்தாழைமேடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி பள்ளியின் தலைமை ஆசிரியர் சலீம்பாபு மற்றும் கொரோனா விழிப்புணர்வு தன்னார்வலர்கள் மூலமாக அந்த கிராம மக்களுக்குச் சுகாதார பரிசோதனைகள் செய்துள்ளனர். இந்த பரிசோதனையில் பொது மக்கள் உடலின் ஆக்ஸிஜன் அளவு, நாடி துடிப்பு, உடல் வெப்பநிலை மற்றும் இரத்த அழுத்தம் ஆகியவைகள் பரிசோதிக்கப்பட்டுப் பதிவு செய்யப்பட்டது. ஊர் பொதுமக்கள் அனைவரையும் அத்தியாவசியம் இன்றி வெளியே வரவேண்டாம் என்றும் பாதுகாப்பாக வீட்டிலேயே இருக்கும் படி கேட்டுக் கொண்டுள்ளனர். பரிசோதனையில் குறையுடையவர்களை மருத்துவ உதவி பெறுவதற்கு மருத்துவமனைக்குச் செல்லவும் அறிவுறுத்தியுள்ளனர்.

Perambalur News :

அதே போல கத்தாழைமேடு கிராமத்தைத் தொடர்ந்து கண்காணித்தும் வருகின்றனர். ஏற்கனவே இந்த கிராம மக்கள் அனைவருக்கும் முககவசம், நிலவேம்பு கசாயம் மற்றும் தூள், அஸ்வினிகாஆல்பம் ஹோமியா மருந்து, ஊட்டச்சத்துப் பொருட்கள் அனைத்தும் கொரோனா விழிப்புணர்வு தன்னார்வலர்கள் மற்றும் தலைமை ஆசிரியர் சலீம்பாபு ஆகியோர் வழங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதைப் பற்றி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி பள்ளியின் தலைமை ஆசிரியர் சலீம்பாபு அவர்களிடம் கேட்ட போது. நம்மால் முடிந்த இந்த சிறு சிறு உதவிகளின் மூலமாக இந்த கிராம மக்களுக்கு விழிப்புணர்வு செய்துள்ளோம். இதே போல ஒவ்வொரு கிராம மக்களுக்கும் கொரோனாவை பற்றித் தெளிவும் விழிப்புணர்வும் உண்டாகுமேயானால் கொரோனாவை இல்லாமல் ஆக்கிவிடலாம் என்று கூறினார். மேலும் அவர் கூறுகையில் இந்த கொரோனா விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கு உதவியவர்களுக்கும் நன்றி தெரிவிப்பதாகக் கூறினார்.

keywords: Perambalur news, perambalur news today, perambalur district news, perambalur mavattam

Gulf Tamil News
Leave a Reply

%d bloggers like this: