ஆட்சியர் அலுவலக ஊழியர்

பெரம்பலூர் ஆட்சியர் அலுவலக ஊழியர் உள்பட 9 பேருக்கு கொரோனா.

425

பெரம்பலூர் ஆட்சியர் அலுவலக ஊழியர் உள்பட 9 பேருக்கு கொரோனா.


Perambalur News: Corona for 9 people including Perambalur Collector Office employee.


பெரம்பலூர் ஆட்சியர் அலுவலக ஊழியர் உள்பட 9 நபர்களுக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சி துறை தேர்தல் பிரிவில் பணிபுரிந்து வரும் ஆலம்பாடியை சேர்ந்த 39 வயதுடைய ஆண் ஊழியர் ஒருவருக்கும், வேப்பந்தட்டை தாலுகா, வாலிகண்டபுரத்தை சேர்ந்த 28, 19 வயதுடைய 2 பெண்களுக்கும், நூத்தப்பூரை சேர்ந்த 48 வயதுடைய ஒரு பெண்ணிற்கும், 17, 29, 24 வயதுடைய ஆண்களுக்கும், குன்னம் தாலுகா லெப்பைக்குடிகாட்டை சேர்ந்த 3 வயது குழந்தை, 30 வயதுடைய பெண் என 9 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் இதுவரை 200 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Keyword: Perambalur News, Perambalur News Today, Perambalur District News, Perambalur MavattamLeave a Reply

%d bloggers like this: