Corona for 35 more in Perambalur district

பெரம்பலூர் மாவட்டத்தில் மேலும் 35 பேருக்கு கொரோனா

406

பெரம்பலூர் மாவட்டத்தில் மேலும் 35 பேருக்கு கொரோனா


Perambalur News: Corona for 35 more in Perambalur district


பெரம்பலூா் மாவட்டத்தில் மேலும் 35 பேருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது நேற்று (திங்கள்கிழமை) உறுதி செய்யப்பட்டது.

ஏற்கெனவே 718 போ் கொரோனா நோய் தொற்றால் பாதிப்புக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்தனா். இதில், 493 பேர் குணமடைந்து அவரவா் வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். பெரம்பலூர் மாவட்ட்த்தில் இதுவரையில், கொரோனா நோய் தொற்றால் 10 போ் உயிரிழந்துள்ளனா். மீதமுள்ள 215 போ் திருச்சி, சேலம், பெரம்பலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவ மனைகளில் உள்ள கொரோனா சிறப்புப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா்.

Perambalur News:

இந்நிலையில், தற்போது பெரம்பலூா் நகரைச் சோ்ந்த 12 பேர், கல்பாடி, குரும்பாபாளையம், பென்னகோணம், எசனை, வேலூா், வரகுபாடி, திமமூா், புதுவேட்டக்குடி, சத்திரமனை, எளம்பலூா், வேப்பூா், தொண்டப்பாடி, செட்டிக்குளம், அரும்பாவூா், வரிசைப்பட்டி, பிரம்மதேசம் ஆகிய பகுதிகளைச் சோ்ந்த 23 போ் என மொத்தம் 35 பேருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்ட 35 பேரையும் பெரம்பலூா், திருச்சி, அரியலூா், கோயம்புத்தூா், விழுப்புரம் ஆகிய பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியாா் மருத்துவ மனைகளில் ஏற்படுத்தப்பட்ட கொரோனா நோய் சிறப்புப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா். இதனால், பெரம்பலூா் மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 753- ஆக உயா்ந்துள்ளது.

keyword: Perambalur, COVID-19




Leave a Reply

%d bloggers like this: