பெரம்பலூர் மாவட்டத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா.

652

பெரம்பலூர் மாவட்டத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா: Corona for 3 more in Perambalur district.

பெரம்பலூர் மாவட்டத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையிலிருந்து சொந்த ஊரான சிறுகனூர் வந்த 24 வயது பெண் ஒருவருக்கும், ஆலத்தூர் வட்டம், மேத்தால் கிராமத்தைச் சேர்ந்த 55 வயதுடைய ஆண் ஒருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

தொடர்ந்து 55வயது ஆண் நபரை திருச்சி மாவட்ட அரசு மருத்துவமனையிலும், இளம்பெண்ணை பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

திறன் பயிற்சிக்குப் பதிவு செய்ய மாவட்ட ஆட்சியர் அழைப்பு.

அ.ம.மு.க. பிரமுகர் கொலை வழக்கில் நான்கு பேரை காவலில் எடுத்து விசாரணை.

[the_ad id=”7251″]

அதே போல் வேப்பூர் கிராமத்தில் 28 வயது பெண்ணிற்கு சளி இருமல் ஏற்பட்டதையடுத்து வேப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார் பிறகு பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் கடந்த 8-ம் தேதி அனுமதிக்கப்பட்டு சளி, ரத்தம் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதில் அந்த பெண்ணிற்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறிந்து உறுதி செய்யப்பட்டது.

பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கையில் 3 கூடியுள்ளது.

[the_ad id=”7250″]
Leave a Reply

%d bloggers like this: