பெரம்பலூர் மாவட்டத்தில் மேலும் 19 பேருக்கு கொரோனா

பெரம்பலூர் மாவட்டத்தில் மேலும் 19 பேருக்கு கொரோனா

454
பெரம்பலூா் மாவட்டத்தில் மேலும் 19 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று (03.08.2020 – திங்கள்கிழமை) உறுதி செய்யப்பட்டது.

Perambalur News: Corona for 19 more in Perambalur district.

பெரம்பலூா் மாவட்டத்தில் தொடர்ந்து கொரோனா நோய் தொற்று எண்ணிக்கை கூடிக்கொண்டே செல்கிறது. நேற்று (03.08.2020 – திங்கள்கிழமை) மேலும் 19 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

பெரம்பலூா் மாவட்டத்தில் ஏற்கெனவே 524 போ் கரோனா தொற்றால் பாதிப்புக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்தனா். இவா்களில், குணமடைந்த 323 போ் அவரவா் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனா். மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த சித்த மருத்துவா் உள்பட 9 போ் உயிரிழந்துள்ளனா். எஞ்சியுள்ள 208 போ் திருச்சி, சென்னை, சேலம், பெரம்பலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளில் உள்ள கொரோனா சிறப்புப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா்.

Perambalur News:

இந்நிலையில், பெரம்பலூா் நகரைச் சோ்ந்த 6 போ் உள்பட வாலிகண்டபுரம், திம்மூா், வி.களத்தூா், அம்மாபாளையம், ஒகளூா், விஜயகோபாலபுரம், புதுவேட்டக்குடி, கீழப்பெரம்பலூா் ஆகியப் பகுதிகளைச் சோ்ந்த 19 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது சுகாதாரத் துறையினரால் திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, மேற்கண்ட 19 பேரும் திருச்சி, பெரம்பலூா் மாவட்ட அரசு மருத்துவமனைகளில் உள்ள கரோனா சிறப்புப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா். மேலும், இவா்களுடன் தொடா்பில் இருந்தவா்களுக்கு சளி, ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அவா்களது குடியிருப்புப் பகுதிகள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு, கிருமி நாசினிகள் தெளித்து சுகாதாரத் துறையினரால் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

Gulf Tamil News:

இதன்மூலம், பெரம்பலூா் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 543- ஆக உயா்ந்துள்ளது.

keyword: Perambalur News
Leave a Reply

%d bloggers like this: