26 பேருக்கு கொரோனா

பெரம்பலூர் மாவட்டத்தில் மேலும் 26 பேருக்கு கொரோனா உறுதி.

671

பெரம்பலூர் மாவட்டத்தில் மேலும் 26 பேருக்கு கொரோனா உறுதி.


Perambalur News : Corona confirmed for another 26 people in Perambalur district.

பெரம்பலூர் மாவட்டத்தில் மேலும் 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் இதுவரை 296 பேர் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இவர்களில் 217 பேர் குணமடைந்து அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்றுவந்த சித்த மருத்துவர் உள்பட இதுவரை 4 பேர் பெரம்பலூர் மாவட்டத்தில் உயிரிழந்துள்ளனர். மீதமுள்ள 89 பேர் திருச்சி, பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளில் உள்ள கொரோனா சிறப்பு பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Perambalur News :

இந்த நிலையில் பெரம்பலூர், ஆலம்பாடி, பூலாம்பாடி, பெருமத்தூர், லெப்பைக்குடிகாடு ஆகிய பகுதிகளை சேர்ந்த 15 பெண்கள் உள்பட 26 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது சுகாதாரத்துறையினரால் நேற்று (26.07.2020) உறுதி செய்யப்பட்டது. இவர்களில் 4 பேர் திருச்சியிலும், ஒருவர் சேலத்திலும், மீதமுள்ள 21 பேர் பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா சிறப்பு பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதைதொடர்ந்து, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட இந்த 26 நபர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுடைய சளி, ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அவர்களது குடியிருப்பு பகுதிகள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு, சுகாதாரத்துறையினரால் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

நேற்று 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோருடைய எண்ணிக்கை 322 ஆக உயர்ந்துள்ளது.

keywords: perambalur news, perambalur news today, perambalur district news, perambalur mavattam,

Gulf Tamil News
Leave a Reply

%d bloggers like this: