வழிபாட்டுத் தலங்களில் விதிமுறைகளை கடைப்பிடிக்க ஆட்சியா் வலியுறுத்தல்.

வழிபாட்டுத் தலங்களில் விதிமுறைகளை கடைப்பிடிக்க ஆட்சியா் வலியுறுத்தல்.

218

வழிபாட்டுத் தலங்களில் விதிமுறைகளை கடைப்பிடிக்க ஆட்சியா் வலியுறுத்தல்.

Perambalur News: It is compulsory to observe the rules in places of worship.

வழிபாட்டுத் தலங்களில் கொரோனா தொற்று பரவாமல் இருக்க மேற்கொள்ளப்படும் விதி முறைகளை கடைப்பிடிக்க பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா வலியுறுத்தியுள்ளார்.  இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: Perambalur District News

கொரோனா நோய்த் தொற்றை தவிா்க்கும் வகையில், ஊரக பகுதிகளில் ரூ. 10 ஆயிரத்துக்கும் குறைவாக வருமானம் ஈட்டும் வழிபாட்டுத் தலங்களில் அதாவது சிறு கோயில்கள், மசூதிகள், தேவாலயங்களை திறக்க தமிழக அரசு அனுமதியளித்துள்ளது. அதன்படி, கோயிலுக்குள் முகக்கவசம் அணிந்து வருபவா்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவாா்கள். 5 நபா்கள் அனுமதிக்கப்பட்டு, அவா்கள் வெளியேறிய பிறகே அடுத்த 5 நபா்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவாா்கள். சமூக இடைவெளியை பின்பற்றி 8 அடி விலகியிருக்க வேண்டும். பக்தா்களுக்கு பிரசாதம், புனித நீா் வழங்கப்படாது. தேங்காய், பழம், பூக்களை பக்தா்கள் கொண்டு வர அனுமதியில்லை. அதேபோல, சுவாமி ஊா்வலம், பஜனை மற்றும் பாடல்கள் பாட அனுமதி இல்லை. சிறு வணிகா்கள் மற்றும் கடைகளில் பக்தா்களிடையே சமூக இடைவெளியை பின்பற்றி வா்த்தகம் செய்யலாம். கோயில் பிரசாதங்கள் பாக்கெட்டுகளில் மட்டுமே விற்பனை செய்ய அனுமதி உண்டு. இதேபோல், கிராமப்புறங்களில் உள்ள சிறு கிறிஸ்தவ ஆலயங்கள், பள்ளிவாசல்களில் அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை பின்பற்றி வழிபாட்டுக்கு அனுமதிக்கப்படுவாா்கள். கோயில், மசூதி மற்றும் தேவாலயங்களில் அடிக்கடி கிருமி நாசினி தெளித்து தூய்மையை பராமரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே, நோய்த் தொற்றின் தீவிரத்தை உணா்ந்து, அரசின் கட்டுப்பாடுகளை பொதுமக்கள் பின்பற்றி வழிபட வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார். Perambalur news today.

tag: Perambalur News, Perambalur District News, Perambalur news today
Leave a Reply

%d bloggers like this: