நிழற்குடையா..ஓய்வறையா…? பெரம்பலூர் அரசு மருத்துவமனை பேருந்து நிறுத்தம்.

219

நிழற்குடையா..ஓய்வறையா…? பெரம்பலூர் அரசு மருத்துவமனை பேருந்து நிறுத்தம்.

Bus stop or Living room…? Perambalur Government Hospital Bus Stop.

நிழற்குடையா? ஒயவைறையா? பெரம்பலூரில் அரசு மருத்துவமனை பேருந்து நிறுத்தத்தில், பயணிகள் மற்றும் நோயாளிகள் பயன்பாட்டிற்காக ஒரு நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைக்கு எதிரே உள்ள இந்த நிழற்குடை, பொதுமக்கள் காத்திருந்து பேருந்து ஏறுவதற்காக அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த நிழற்குடை சமீப காலமாக, நிழற்குடையாகப் பயன்படுத்தப்படாமல், உள்ளூர்வாசிகள் ஓய்வெடுக்கும் ஓய்வறையாக மாறியுள்ளது.

தற்போது வெய்யில் காலம் என்பதாலும்,கொரோனா தொற்றால் ஏற்பட்ட வேலையின்மையாலும், மக்கள் தூங்கிப் பொழுதைக் கழிக்கும் இடமாக இந்த நிழற்குடை மாறிவிட்டது.

கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பிக்க பெரம்பலூர் மாவட்ட பெண்களுக்கு அழைப்பு.

பாடாலூர் அருகே இருசக்கர வாகனத்தில் மணல் கடத்தியவர் கைது.

பகலில் ஓய்வறையாக மாறிவிட்ட நிழற்குடை, இரவில் மது அருந்தும் கூடமாக மாறிவிடுகிறது. மது அருந்துபவர்கள் பயன்படுத்திய பாட்டில்களை அங்கேயே வீசி விட்டு, எச்சில் வாந்தி ஆகிய அசுத்தங்களை செய்கிறார்கள்.

அரசு மருத்துவமனைக்கு எதிரேயே, இப்படி சுகாதாரமற்ற ஒரு இடமாக அந்த நிழற்குடை மாறிக்கிடக்கிறது. இந்த நிழற்குடை மட்டுமில்லாமல், மாவட்டத்திலுள்ள பெரும்பாலான நிழற்குடைகளும் இதே அவல நிலையில்தான் உள்ளன.

எனவே, சுகாதாரத்தை பேணும் வகையிலும், பொதுமக்களின் பேருந்து காத்திருப்பிற்கான சுத்தமான இடமாகவும், பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு எதிரே உள்ள இந்த நிழற்குடை மாற்றப்பட்டு சரியான பயன்பாட்டுக்கு கொண்டுவர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என, அரசு மருத்துவமனை பகுதியில் வசிக்கும் மக்களும், வெளியூர் பயணம் செல்லும் பயணிகளும் எதிர்பார்க்கிறார்கள்.

tags: perambalur

gulf tamil news
Leave a Reply

%d bloggers like this: