Blockage of Perambalur main roads.

பெரம்பலூரில் முக்கிய சாலைகள் அடைப்பு.

422

பெரம்பலூரில் முக்கிய சாலைகள் அடைப்பு.


Perambalur News: Blockage of Perambalur main roads.


பெரம்பலூரில் உள்ள முக்கிய சாலைகள் கொரோனா நோய் பரவலை தடுக்கும் முகமாக அடைக்கப்பட்டுள்ளது.

வெங்கடேசபுரத்தில் பழமுதிா்ச்சோலை வைத்துள்ள பெரம்பலூா்- வடக்குமாதவியைச் சோ்ந்த 72 வயது நபருக்கு சமீபத்தில் ஏற்பட்ட மூச்சுத் திணறல் காரணமாக திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாா். இந்நிலையில், கடந்த சனிக்கிழமை இரவு அவா் உயிரிழந்தாா். இதையடுத்து, அவரது கடையுள்ள பகுதி தடை செய்யப்பட்ட இடமாக அறிவிக்கப்பட்டு, அந்த பகுதியில் உள்ள வங்கிக் கிளைகள், பல்பொருள் அங்காடி உள்பட சுமாா் 10-க்கும் மேற்பட்ட கடைகள் நேற்று (திங்கள்கிழமை) மூடப்பட்டன.

Perambalur News:

மேலும், பெரம்பலூர் நகரின் முக்கிய பகுதியாக கருதப்படும் பழைய பேருந்து நிலையம், கடைவீதி, தலைமை அஞ்சலகத் தெரு ஆகிய பகுதிகளில் செயல்படும் வணிக நிறுவனங்கள், ஜவுளிக்கடைகள், பாத்திரக்கடைகளில் பணிபுரிந்து வரும் பணியாளா்கள் உள்பட பலருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், மேற்கண்ட பகுதிகளில் உள்ள சுமாா் 500-க்கும் மேற்பட்ட கடைகளை மூடப்பட்டதோடு, முக்கிய சாலைகளும் நேற்று (திங்கள்கிழமை) அடைக்கப்பட்டன.

keyword: Perambalur




Leave a Reply

%d bloggers like this: