பாடாலூர் அருகே புகையிலை விற்பனை செய்தவர்கள் கைது.

பாடாலூர் அருகே புகையிலை விற்பனையாளர்கள் கைது.

199

பாடாலூர் அருகே புகையிலை விற்பனையாளர்கள் கைது.

Perambalur news: Arrested for selling banned tobacco.

பாடாலூர் அருகே தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை செய்த நான்கு நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா பிலிமிசை கிராமத்தில் ராஜா என்பவரின் உரக்கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை, பாக்கு விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் மருவத்தூர் காவல் உதவி ஆய்வாளர் விஜயலட்சுமி மற்றும் காவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று சோதனையிட்டனர். அப்போது அங்கு ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள புகையிலை, பாக்கு மூட்டைகள் இருந்ததை கண்டனர்.பாடாலூர் அருகே புகையிலை விற்பனையாளர்கள் கைது. Banned tobacco

சாத்தான் குளம் சம்பவத்தை கண்டித்து பெரம்பலூரில் ஆர்ப்பாட்டம்

கண்டுபிடிக்கப்பட்ட புகையிலை மற்றும் பாக்கு மூட்டைகள் பிலிமிசை கிராமத்தை சேர்ந்த பூமாலை மகன் ராஜன், மதியழகன் மகன் சிலபம்பரசன், பழனிமுத்து மகன் கோவிந்தராசு மற்றும் இலுப்பைக்குடியை சேர்ந்த மருதமுத்து மகன் மருதராஜா ஆகியோர் விற்பனை செய்வதற்காக வைத்திருந்தது தெரியவந்தது.

இதைதொடர்ந்து புகையிலை மற்றும் பாக்குமூட்டைகளை காவல்துறையினர் பறிமுதல் செய்ததுடன் 4 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

tag: perambalur news
Leave a Reply

%d bloggers like this: