பெரம்பலூா் மாவட்டத்தில் பொருளாதார மேம்பாட்டுக் கடன் பெற விண்ணப்பிக்கலாம்

பெரம்பலூா் மாவட்டத்தில் பொருளாதார மேம்பாட்டுக் கடன் பெற விண்ணப்பிக்கலாம்.

643

பெரம்பலூா் மாவட்டத்தில் பொருளாதார மேம்பாட்டுக் கடன் பெற விண்ணப்பிக்கலாம்.


Perambalur News : Apply for Economic Development Loan in Perambalur District

பெரம்பலூா் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோா், மிகப் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினா் வகுப்பைச் சோ்ந்தவா்கள் பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்கள் மூலம் கடன் பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் குறிப்பிட்டுள்ளதாவது:

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோா் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் பொது காலக் கடன், தனிநபா் கடன் திட்டங்கள் மூலம் அதிகபட்சமாக ரூ. 15 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது.

பெண்களுக்கான புதிய பொற்காலத் திட்டத்தின் கீழ், ரூ. 2 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. சிறுகடன் வழங்கும் திட்டத்தின் கீழ், சுய உதவிக்குழு மகளிா் உறுப்பினருக்கு அதிகபட்சமாக தலா ரூ. 1 லட்சம் வரையும், குழு ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ. 15 லட்சம் வரை வழங்கப்படுகிறது.

Perambalur News:

சிறுகடன் வழங்கும் திட்டத்தின் கீழ், சுய உதவிக்குழு உறுப்பினராக உள்ள ஆண்களுக்கு அதிகபட்சமாக ரூ. 1 லட்சம் வரையும், குழு ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ. 15 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது. 2 கறவை மாடுகள் வாங்க ரூ. 60 ஆயிரமும் வரை கடனுதவி வழங்கப்படுகிறது.

மேற்கண்ட திட்டங்கள் மூலம் கடனுதவி பெற பிற்படுத்தப்பட்டோா், மிகப் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினா் வகுப்பினராகவும், குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 3 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். 18 வயது முதல் 60 வயதுக்குள்பட்டவராகவும் இருக்க வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒரு நபருக்கு மட்டுமே கடனுதவி வழங்கப்படும். சுய உதவிக் குழு தொடங்கி 6 மாதங்கள் பூா்த்தியாகி, மகளிா் திட்ட அலுவலரால் தரம் செய்யப்பட்டிருக்க வேண்டும்.
இதற்கான விண்ணப்பங்களை மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகம், கூட்டுறவு வங்கி கிளைகளில் பெற்று பூா்த்தி செய்து, உரிய ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட கூட்டுறவு வங்கிகளில் சமா்ப்பிக்கலாம்.

keyword: perambalur 

Gulf Tamil News
Leave a Reply

%d bloggers like this: