பெரம்பலூர் ரவுடி கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது.

412

பெரம்பலூர் ரவுடி கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது.

பெரம்பலூர் திரு நகரைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தியின் மகன் வீர மணிகண்டன் (27). இவர் கடந்த 7ஆம் தேதி இரவு அவரது வீட்டின் அருகே சிலரால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் குறித்து அவரது மனைவி புஷ்பராணி அளித்த புகாரின் பேரில் பெரம்பலூர் காவல் ஆய்வாளர் சுப்பையா தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

முன்விரோதம் காரணமாக வீரமணிகண்டனை கொலை செய்ததாக, பெரம்பலூர் திருநகரை சேர்ந்த முருகானந்தம், பெரம்பலூர் ஆலம்பாடி சாலை புது காலனியைச் சேர்ந்த செல்வராஜ் மகன் டால்டா என்கிற கண்ணன், பெரம்பலூர் அரனாரை பிரிவை சேர்ந்த பாஸ்கர் மகன் பார்த்தா என்கிற பார்த்திபன் ஆகியோர் நேற்று முன்தினம் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

[the_ad id=”7251″]

இந்நிலையில் இந்த கொலை சம்பவத்தில் பெரம்பலூர் வடக்கு மாதவி சாலையைச் சேர்ந்த விஸ்வநாதன் மகன் அய்யனார் என்பவரை போலீசார் நேற்று கைது செய்தனர் இதனைத் தொடர்ந்து நான்கு பேரையும் பெரம்பலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ஜெயங்கொண்டம் கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.

[the_ad id=”12149″]
Leave a Reply

%d bloggers like this: