பெரம்பலூரில் லஞ்சம் வாங்கிய மின்வாரிய ஊழியர் கைது Accepting bribe 

பெரம்பலூரில் லஞ்சம் வாங்கிய மின்வாரிய ஊழியர் கைது.

693

பெரம்பலூரில் லஞ்சம் வாங்கிய மின்வாரிய ஊழியர் கைது.

Perambalur News: Electricity worker arrested for accepting bribe in Perambalur

பெரம்பலூர் அருகே விவசாயி மின் மோட்டாருக்கு மும்முனை மின் இணைப்பு வழங்க 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய மின்துறை வணிக ஆய்வாளர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர்.

பெரம்பலூர் மின்வாரிய உதவி மின் பொறியாளர் அலுவலக (தெற்குப் பிரிவு) வணிக ஆய்வாளராக பாலசுப்ரமணியன் (40) பணிபுரிந்து வருகிறார்.

பெரம்பலூர் அருகேயுள்ள நொச்சியம் கிராமத்தைச் சேர்ந்த வீரமுத்து, தனது வயலில் உள்ள விவசாய ஒருமுனை மின் இணைப்பை, மும்முனை மின் இணைப்பாக மாற்றித் தரக்கோரி, மின் வாரிய உதவி மின் பொறியாளர் அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். Perambalur News:

பெரம்பலூரில் லஞ்சம் வாங்கிய மின்வாரிய ஊழியர் கைது Accepting bribe 

இனி வீடுகளிலேயே கொரோனா பரிசோதனை செய்யலாம்

இதற்காக புதிதாக மின் கம்பிகள் அமைத்து மின் இணைப்பு வழங்க மதிப்பீடு தயார் செய்து, அனுமதி பெற்று மின் இணைப்பு வழங்க பரிந்துரை செய்ய லஞ்சமாக 10 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டுமென வணிக ஆய்வாளர் பாலசுப்ரமணியன் கூறினாராம்.

ஆனால், லஞ்சம் கொடுக்க விரும்பாத வீரமுத்து மகன் ஆறுமுகம் பெரம்பலூர் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல் துறையினரிடம் புகார் அளித்தார்.

இதனைத் தொடர்ந்து, காவல் துறையினரின் ஆலோசனைப்படி ரசாயனம் தடவப்பட்ட 10 ஆயிரம் ரூபாயை மின் வாரிய வணிக ஆய்வாளர் பாலசுப்ரமணியனிடம் திங்கள்கிழமை மாலை ஆறுமுகம் கொடுத்தார்.

அப்போது அங்கு மறைந்திருந்த துணை கண்காணிப்பாளர் சந்திரசேகரன், ஆய்வாளர்கள் கலோக்சனா, ரத்தினவள்ளி தலைமையிலான காவலர்கள், வணிக ஆய்வாளர் பாலசுப்ரமணியனை கைது செய்தனர்.

tags: perambalur
Leave a Reply

%d bloggers like this: