ஒன்றிய அலுவலகம்

கொரோனா தொற்று: பெரம்பலூரில் 9 அரசு அலுவலகங்கள் மூடல்.

954

கொரோனா தொற்று: பெரம்பலூரில் 9 அரசு அலுவலகங்கள் மூடல்.


Perambalur news: 9 government offices in Perambalur closed.

பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் 222 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே பெரம்பலூர் ஆட்சியர் அலுவலக 2வது தளத்திலுள்ள உள்ளாட்சித் தேர்தல் பிரிவு அலுவலக உதவியாளருக்கு தொற்றியதால் அந்தப் பிரிவு அலுவலகம் 2 நாட்களுக்கு முன்பே மூடப்பட்டது. perambalur news today

இந்நிலையில் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகத்தில் அலுவலக உதவியாளராக பணிப்புரியும், பெரம்பலூர் அண்ணாநகரை சேர்ந்த 40 வயது நபர், நெடுவாசல் கிராமத்தை சேர்ந்த, பெரம்பலூர் ஊராட்சிகள் உதவி இயக்குனர் அலுவலகத்தில் பணிபுரியும் 45 வயது டிரைவர் ஆகியோருக்கு கொரோனா தோற்று உறுதியானதால் நேற்று ஆட்சியர் அலுவலகப் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குனர் அலுவலகம், ஊராட்சிகள் உதவி இயக்குனர் அலுவலகம், உள்ளாட்சி தேர்தல் பிரிவு அலுவலகம், மாவட்ட ஊராட்சி அலுவலகம், ஆட்சியரின் நேர்முக உதவியாளர்களாக பிஏ சிறுசேமிப்பு, பிஏ சத்துணவு, பிஏ வளர்ச்சி அலுவலகங்கள், முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகம் என மொத்தம் 8 அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளன. perambalur district

இவைகளில் நகராட்சி துப்புரவு பணியாளர்கள் மட்டும் கிருமிநாசினி தெளித்தனர். மேலும் குன்னம் வட்டாட்சியர் அலுவலகத்தில் அலுவலக உதவியாளராகப் பணிப்புரியும் திருச்சியை சேர்ந்த 46 வயது பெண்ணுக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.

இதேபோல் பெரம்பலூர் துறைமங்கலத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணிபுரியும் அரனாரையை சேர்ந்த 49 வயதுடைய பெண் துணை வட்டார வளர்ச்சி அலுவலர், அதே அலுவலகத்தில் தொழில் நுட்ப உதவியாளர்களாக பணிபுரியும் பொம்மனப்பாடியை சேர்ந்த 38 வயதுடைய ஆண், வடக்குமாதவியை சேர்ந்த 28 வயது ஆண் ஆகிய 4 பேருக்கு கொரோனா தோற்று உறுதியானதால் நேற்று ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மூடப்பட்டது. ரசு அலுவலகங்கள்

tags: perambalur news, perambalur news today, perambalur district, tamil news
Leave a Reply

%d bloggers like this: