பெரம்பலூர் மாவட்டத்தில் மேலும் 69 பேருக்கு கொரோனா

பெரம்பலூர் மாவட்டத்தில் மேலும் 69 பேருக்கு கொரோனா தொற்று.

425

பெரம்பலூர் மாவட்டத்தில் மேலும் 69 பேருக்கு கொரோனா தொற்று.


Perambalur News: 69 new cases of corona infection in Perambalur district.


பெரம்பலூர் மாவட்டத்தில் விஸ்வரூபம் எடுக்கிறது கொரோனா தொற்று. நேற்று மட்டும் 69 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  பெரம்பலூர் மாவட்டத்தில்  கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு போகிறது. பெரம்பலூர் மாவட்டத்தில் மருத்துவர்கள், காவல் ஆய்வாளர் உள்பட 69 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Perambalur News: 

இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 69 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்ட குற்றப்பிரிவு பெண் காவல் ஆய்வாளர், வி.களத்தூர் கால் நடை மருத்துவ ஆய்வாளரான பெண் மருத்துவர், விஜயகோபாலபுரத்தில் தனியார் டயர் தொழிற்சாலை ஊழியர்கள் 6 பேருக்கும், வி.களத்தூரில் கொரோனாவினால் உயிரிழந்த முதியவருடன் தொடர்பில் இருந்த இருவருக்கும், ரஷ்ய நாட்டில் இருந்து திரும்பி வந்த அந்தனூரை சேர்ந்த மருத்துவருக்கும், எசனையை சேர்ந்த கால்நடை மருத்துவருக்கும், அவரது மனைவிக்கும், பெரம்பலூரை சேர்ந்த தனியார் மருத்துவமனை மருத்துவருக்கும், வயலப்பாடியில் பெண் மற்றும் அவரது 2 மகன்களுக்கும், துறைமங்கலம், கூடலூரில் தாய்-மகனுக்கும் உள்பட மொத்தம் 69 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட 69 பேரில், 46 பேர் ஆண்கள் ஆவார்கள்.

இதனால் பெரம்பலூர் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 641 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 195 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

keyword: perambalur news, perambalur news today,

Gulf News Tamil
Leave a Reply

%d bloggers like this: