கத்தியைக் காட்டி

பெரம்பலூரில் கத்தியைக் காட்டி மிரட்டிய 3 பேர் கைது. 

473

பெரம்பலூரில் கத்தியைக் காட்டி மிரட்டிய 3 பேர் கைது.


Perambalur News: 3 arrested for threatening in Perambalur.

பெரம்பலூரில் பெண்ணிடம் கத்தியைக் காட்டி மிரட்டி தகராறில் ஈடுபட்ட 3 நபர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

பெரம்பலூர் சங்குப்பேட்டை, ராதாகிருஷ்ணன் தெருவைச் சேர்ந்தவர் பத்மநாபன் மனைவி இளவரசி. 45 வயதான இவர் கடந்த 9ந் தேதி மதியம் 1 மணியளவில், சங்குப்பேட்டை ஏரிக்கரை அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த நடராஜன் மகன் மணிகண்டன் (வயது 25), செல்லமுத்து மகன் சூர்யா (வயது 24), ராஜேந்திரன் மகன் தமிழ்ச் செல்வன் (வயது 24) ஆகிய மூவரும் இளவரசியை வழிமறித்து, தகாத வார்த்தைகளால் திட்டி தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியைக் காட்டி மிரட்டி, ரூ.500 பணத்தைப் பிடுங்கிக் கொண்டு கீழே தள்ளி விட்டு கொலை மிரட்டல் விடுத்ததாக, இளவரசி நேற்று பெரம்பலூர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார்.

Perambalur News:

இளவரசியின் புகாரின் பேரில் காவல் துணை ஆய்வாளர் செந்தமிழ் செல்வி வழக்குப் பதிவு செய்து 3 பேர்களையும் கைது செய்து விசாரணை செய்து வருகிறார்.


tag: perambalur news, perambalur news today, perambalur today news, perambalur district news,Leave a Reply

%d bloggers like this: