242 பேருக்கு நலத்திட்ட உதவிகளை பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்

57

242 பேருக்கு நலத்திட்ட உதவிகளை பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.


பெரம்பலூர் அருகே உள்ள செங்குணம் கிராமத்தில் மனுநீதி நாள் நிறைவு விழாவில் 242 பேருக்கு ரூ.1.38 கோடியில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

பெரம்பலூர் அருகே உள்ள செங்குணம் கிராமத்தில் மனுநீதி நாள் நிறைவு விழா நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட மாவட்ட ஆட்சியர் சாந்தா தலைமை தாங்கினார். பெரம்பலூர் இளம்பை தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். விழாவில் மாவட்ட ஆட்சியர் சாந்தா பல்வேறு துறைகளின் சார்பில் 242 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 38 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

[the_ad id=”7251″]

அப்போது அவர் பேசுகையில், மக்களின் தேவைகளை அறிந்து பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மக்கள் தொடர்பு முகாம்களை கிராமங்கள் தோறும் நடத்தி மக்களின் தேவைகள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. மேலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாற்றுத்திறனாளிகளின் அளவு 2 சதவீதம் மட்டுமே இருக்க வேண்டிய நிலையில் பெரம்பலூர் மாவட்டத்தில் அந்த அளவு சற்று கூடுதலாக உள்ளது என்றார்.

மேலும் மத்திய அரசு நாடு முழுவதும் மாற்றுத்திறனாளிகள் பற்றிய புள்ளி விவரங்களை சேகரிக்கவும். அரசின் திட்டங்கள் அவர்களுக்கு எளிதில் கொண்டு செல்லும் நோக்கத்திலும், மாற்றுத்திறனாளிகளுக்கு தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை வழங்கும் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் கீழ் மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டத்தில் அறிவிக்கப்பட்ட 21 வகையான மாற்றுத்திறனாளிகளுக்கும் இந்த தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை வழங்கப்படுகிறது. இதனை பெற்றுக் கொண்டு அரசின் திட்டங்களை பெற்று பயன்பெறலாம் என்றார்.

[the_ad id=”7251″]

இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தெய்வநாயகி, வருவாய் கோட்டாட்சியர் சுப்பையா, ஊராட்சி மன்ற தலைவர் சந்திரா, ஒன்றிய கவுன்சிலர் கலையரசன், தாசில்தார் பாரதிவளவன், வட்ட வழங்கல் அலுவலர் பழனிசெல்வன், வருவாய் அலுவலர் இளங்கோவன், கிராம நிர்வாக அதிகாரி அர்ச்சுணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக அரசின் பல்வேறு துறைகள் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள், கடனுதவிகள், சிறப்பு திட்டங்கள், நலத்திட்ட உதவிகள் போன்றவை குறித்து அனைத்து அரசுத்துறை அலுவலர்களும் விரிவாக எடுத்துரைத்தனர்.

[the_ad id=”7250″]

[the_ad id=”7251″]

[the_ad id=”7252″]
Leave a Reply

%d bloggers like this: