பெரம்பலூருக்கு சென்னையில் இருந்து வந்த 207 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்.

466

பெரம்பலூருக்கு சென்னையில் இருந்து வந்த 207 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்.

சென்னையில் வருகிற 30-ம் தேதி வரை முழுமையான ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது என்ற தமிழக முதல்வரின் அறிவிப்பை தொடர்ந்து பெரம்பலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து சென்னைக்கு சென்று வசித்துவருபவர்கள் கடந்த இரண்டு நாட்களாக சொந்த கார்கள், டாக்சிகள் மற்றும் இருசக்கர வாகனங்களில் பெரம்பலூருக்கு திரும்பி வந்துள்ளனர்.

நேற்ற சாலைகளில் சென்னை, காஞ்சீபுரம் மாவட்ட கோக்குவரத்து அலுவலக பதிவு எண்களை கொண்ட வாகனங்களில் அதிகம் பேர் பயணித்து வந்துள்ளனர். பெரம்பலூர் மாவட்ட எல்லையிலும், பெரம்பலூர் நகரிலும் காவல்துறையினர் சென்னை பதிவு எண்களை கொண்ட வாகனங்களை தங்களது முகவரிகளை கண்டுபிடித்து அவர்களை தனிமைப்படுத்தும் பணியில் காவல்துறையினர் மற்றும் சுகாதாரத்துறையினரும் ஈடுபட்டுள்ளனர்.

[the_ad id=”7251″]

இதனிடையே பெரம்பலூர் ரோவர் கல்லூரி விடுதியில் 33 பேரும், வேபந்தட்டை அரசு கலைக்கல்லூரியில் 65 பேரும், வேப்பூர் அரசு கலைக் கல்லூரியில் 35 பேரும், பாடாலூரில் உள்ள அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் 74 பேரும் கண்டறியப்பட்டு மொத்தம் 207 பேர் தனிமை படுத்தி வைக்கப்பட்டுள்ளதாக  சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.

இந்நிலையில் ஆலத்தூர் தாலுகா நாரணமங்கலம் கிராமத்தை சேர்ந்த 60 வயது மதிக்கதக்க முதியவர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

[the_ad id=”12149″]

 

[the_ad_placement id=”after-content”]
Leave a Reply

%d bloggers like this: