குழந்தைகளை வேலையில் அமர்த்தினால் 2 ஆண்டு சிறை. 

138

குழந்தைகளை வேலையில் அமர்த்தினால் 2 ஆண்டு சிறை.

சர்வதேச குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும், பெரம்பலூர் மாவட்ட தலைமை நீதிபதியுமான சுபாதேவி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது.

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12-ந் தேதி குழந்தை தொழிலாளர்களுக்கு எதிரான நாளாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. எந்தவொரு அலுவலகங்கள், தொழிற்சாலைகள் உணவகங்கள் மற்றும் எவ்வித வேலைக்கும் 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை பணியில் ஈடுபடுத்தக்கூடாது. எவரேனும் குழந்தைகளை பணியில் அமர்த்தினால் அது குழந்தைத் தொழிலாளர் தடுப்பு சட்டத்தின்படி தண்டனைக்குரிய குற்றமாகும்.

[the_ad id=”7251″]

14 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளை எவ்வித பணியிலும் ஈடுபடுத்துவது, 15 முதல் 18 வயதிற்கு உட்பட்ட வளரிளம் பருவத்தினரை அபாயகரமான தொழில்களில் ஈடுபடுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு தொழிலலில் ஈடுபடுத்தினால் அபராதமாக ரூ.50 ஆயிரமும், 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் விதிக்கப்படும்.

மேலும் 15 வயது முதல் 18 வயது வரை உள்ள வளரிளம் குழந்தைகளை குறிப்பாக பெண் குழந்தைகளை வேலைக்கு அமர்த்தும் போது அவர்களுக்கு உரிய பாதுகாப்பினை உறுதி செய்திட வேண்டும். அவர்களுக்கு எதிராக எந்த விதமான பாலியல் குற்றங்களும் நடைபெறாமல் பாதுகாக்கப்பட வேண்டும்.

6 வயது முதல் 14 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு கட்டாய அடிப்படைக்கல்வி வழங்கவேண்டும் என்று சட்டம் உள்ளது. எனவே பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டும். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

[the_ad id=”12149″]

 

[the_ad_placement id=”after-content”]
Leave a Reply

%d bloggers like this: