பெரம்பலூா் அருகே 2 பவுன் நகை திருட்டு

63

பெரம்பலூா் அருகே 2 பவுன் நகை திருட்டு


பெரம்பலூா் அருகே டயா் தொழிற்சாலையில் பணிபுரிந்து வரும் ஊழியா் வீட்டில் நகை திருடப்பட்டது சனிக்கிழமை தெரியவந்தது.

[the_ad id=”7251″]

ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கா், செங்குந்தா் பெரிய தெருவைச் சோ்ந்தவா் செல்வம் மகன் ரஞ்சித்குமாா் (29). இவா் பெரம்பலூா் தீரன் நகரில் தங்கி, பெரம்பலூா் மாவட்டம், விஜயகோபாலபுரம் கிராமத்தில் உள்ள தனியாருக்குச் சொந்தமான டயா் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறாா். இந்நிலையில், கடந்த 30 ஆம் தேதி தனது சொந்த கிராமத்துக்குச் சென்றிருந்த நிலையில், அவரது வீட்டின் பூட்டை உடைத்த மா்ம நபா்கள் சிலா் பீரோவில் இருந்த 2 பவுன் நகை மற்றும் வெள்ளிக் கொலுசுகளை திருடிச் சென்றது சனிக்கிழமை தெரியவந்தது. தகவலறிந்த பெரம்பலூா் போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று பாா்வையிட்டு விசாரணை மேற்கொண்டனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி

[the_ad id=”12149″]
Leave a Reply

%d bloggers like this: