Coronavirus infection in 10 more people in Perambalur district.

பெரம்பலூர் மாவட்டத்தில் மேலும் 19 பேருக்கு கொரோனா.

256

பெரம்பலூர் மாவட்டத்தில் மேலும் 19 பேருக்கு கொரோனா.


Perambalur News: 19 more corona infections in Perambalur district.


பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர் நகராட்சி பகுதியை சேர்ந்த 6 பேர் மற்றும் லாடபுரம், நக்கசேலம், அடைக்கம்பட்டி, வாலிகண்டபுரம், கொளப்பாடி, ஒகளூர், நல்லறிக்கை, துங்கபுரம், கொளக்காநத்தம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 13 பேர் என மொத்தம் 19 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து 19 பேரும் பெரம்பலூர், திருச்சி, சிறுவாச்சூர், அரியலூர், தஞ்சாவூர் ஆகிய பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள கொரோனா சிறப்பு வார்டுகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றால் ஆயிரத்து 240 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஆயிரத்து 48 பேர் குணமடைந்துள்ளனர். 17 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர்.

175 பேர் பெரம்பலூர், திருச்சி, அரியலூர், சேலம், சென்னை, புதுக்கோட்டை, சிறுவாச்சூர், கவுள்பாளையம் ஆகிய பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Keyword: Perambalur, Perambalur News, Perambalur news today




Leave a Reply

%d bloggers like this: