பெரம்பலூரில் மத்திய அரசின் சட்ட திருத்த நகலை எரித்த 15 பேர் கைது. 

265

பெரம்பலூரில் மத்திய அரசின் சட்ட திருத்த நகலை எரித்த 15 பேர் கைது.

பெரம்பலூரில் மத்திய அரசின் அவசர சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி அதன் சட்ட நகலை எரித்து போராட்டத்தில் ஈடுபட்ட 15 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு அத்தியாவசிய பொருட்கள் சட்டம் 1955-ல் பல திருத்தங்களை செய்து அதை அவசர சட்டமாக கடந்த 5-ந் தேதி மத்திய அரசிதழில் வெளியிட்டது. இந்த சட்ட திருத்தம் விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும்.

எனவே அதனை திரும்பப்பெற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி சட்டநகல்கள் எரிப்பு போராட்டம் பெரம்பலூர் பாலக்கரை ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் முன்பு விவசாய சங்க மாவட்ட தலைவர் செல்லதுரை தலைமையில் நேற்று நடந்தது.

[the_ad id=”7251″]

இதில் தமிழக விவசாயிகள் சங்க மாநில செயலாளர் ராஜாசிதம்பரம், விவசாயிகள் சங்கங்களின் நிர்வாகிகள் தாமோதரன், ஏ.கே.ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அப்போது வேளாண்மை உற்பத்தி பொருட்களின் வணிக ஊக்குவிப்பு அவசர சட்டம், விவசாயிகளுக்கு விலை உத்தரவாதம் மற்றும் சேவைகள் மீதான அவசர சட்டம் ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அதன் சட்ட நகல்களை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த பெரம்பலூர் காவல்துறையினர் எரிந்து கொண்டிருந்த சட்ட திருத்த நகலை அணைத்து, போராட்டத்தில் ஈடுபட்ட 15 பேரை கைது செய்தனர்.

[the_ad id=”12149″]

 

[the_ad_placement id=”after-content”]
Leave a Reply

%d bloggers like this: