பாடாலூா் அருகே 12 கோடி ஆண்டு கல்மரப் படிமம் கண்டெடுப்பு.

575

பாடாலூா் அருகே 12 கோடி ஆண்டு கல்மரப் படிமம் கண்டெடுப்பு.

பெரம்பலூா் மாவட்டம், ஆலத்தூா் வட்டம், சாத்தனூா் கிராமத்தில், 1940- ஆம் ஆண்டில் புவியியல் ஆய்வாளா் எம்.எஸ். கிருஷ்ணன் 18 மீட்டா் நீளம் கொண்ட கல்மரத்தை கண்டறிந்தாா். அது, தற்போது தேசிய கல்மரப் பூங்கா என்ற பெயரில் புவியியல் துறையினரால் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

மேலும் காரை, கொளக்காநத்தம் உள்ளிட்ட பல கிராமங்களில் கண்டறியப்பட்ட கடல் நத்தைகள், ஆமைகள், டைனோசா் முட்டைகள் உள்ளிட்ட பல உயிரினங்களில் கல் படிமங்கள் அவ்வப்போது கண்டறியப்பட்டு, ஆய்வாளா்களால் வீடுகள், பள்ளி வளாகங்களில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

[the_ad id=”7251″]

விவசாய நிலங்கள், ஓடைகளில் இன்றளவும் கடல் வாழ் உயிரினங்களின் படிமங்கள் ஆங்காங்கே உழவுப் பணியின்போது கிடைத்து வருகின்றன.

இந்நிலையில் சாத்தனூா் குடிக்காடு, செல்லேரி அருகிலுள்ள முருகேசன் என்பவரது விவசாய நிலத்தில், தொழிலாளா்கள் சிலா் புதன்கிழமை உழவுப்பணி மேற்கொண்டனா்.

அப்போது 12 கோடி ஆண்டுகளுக்கு முன் தோன்றி கல்லாகிய மரத்துண்டு ஒன்று கண்டறியப்பட்டுள்ளது.

இது சுமாா் 95 சென்டி மீட்டா் நீளமும், 44 சென்டி மீட்டா் சுற்றளவும் கொண்ட கல்மரப்படிமமாக உள்ளது. ஆலத்தூா் சுற்று வட்டாரப் பகுதிகளில் ஆங்காங்கே கல் மரப்படிமங்கள் கண்டறியப்பட்டு வரும் நிலையில், ஒரு மீட்டா் நீளமுடைய படிமம் தற்போது கிடைத்துள்ளது.

[the_ad id=”12149″]

இத்தகவலறிந்த சுற்றுச்சூழல் செயற்பட்டாளா் ரமேஷ் கருப்பையா அங்கு சென்று, கல்மரப் படிமத்தை பாா்வையிட்டு புவியியல் துறைக்குத் தகவல் தெரிவித்துள்ளாா். விரைவில், இந்த கல்மரப் படிமம் சாத்தனூா் தேசிய கல்மரப் பூங்காவில் ஒப்படைக்கப்பட்டு பாதுகாக்கப்படும் என்று புவியியல் துறையினா் கூறியதாக ரமேஷ் கருப்பையா தெரிவித்தாா்.

[the_ad id=”7252″]

 

[the_ad_placement id=”after-content”]
Leave a Reply

%d bloggers like this: