வேப்பூர் ஏரியில் கூட்டமாக மீன்பிடித்த கிராம மக்கள்.

வேப்பூர் ஏரியில் கூட்டமாக மீன்பிடித்த கிராம மக்கள்.

205

வேப்பூர் ஏரியில் கூட்டமாக மீன்பிடித்த கிராம மக்கள்.

குன்னம் அருகே வெப்பூரில் உள்ள பெரிய ஏரியில் கிராம மக்கள் கூட்டமாக சென்று மீன்பிடி திருவிழா நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகில் உள்ள பெரிய வேப்பூர் ஏரியில் சுற்றுப்பகுதிகளை சேர்ந்த கிராம மக்கள் சார்பில் ஆண்டுதோறும் மீன்பிடி திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த வருடம் கொரோனா நோய் தொற்று பரவலை தடுப்பதற்காக ஊரடங்கு அமலில் உள்ளதால், மீன்பிடி திருவிழா நடத்துவதில் சிக்கல் உண்டானது.

[the_ad id=”7251″]

கண்ணாடி கதவு மூடியிருப்பது தெரியாமல் மோதிய பெண் உயிரிழந்தார்.

ராஜஸ்தானில் இளைஞர் ஒருவரை அடித்து சிறுநீர் குடிக்க வைத்த கொடூரம்!

இந்நிலையில் வேப்பூர் சுற்றுப்பகுதி கிராம மக்கள் நேற்று காலை திடீரென தடையை மீறி இந்த ஏரியில் மீன்பிடி திருவிழாவை நடத்தினர். இதில் 25 கிராம பகுதிகளை சேர்ந்த இரண்டாயிரத்திற்கும் அதிகமானோர் கூடி ஏரியில் இறங்கி மீன்களை பிடித்தனர்.

ஊரடங்கு அமலில் உள்ள இந்த சூழலில் சமூக இடைவெளியின்றி ஆயிரத்திற்கும் அதிகமானோர் ஒன்றாக கூடி மீன்பிடி திருவிழா நடத்தியது அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மீன்பிடி திருவிழா நடைபெறுவது சம்பந்தமாக தகவல் கிடைத்ததும் குன்னம் காவல் துணை-ஆய்வாளர் பாலு தலைமையில் காவல்துறையினர் விரைந்து சென்று பொதுமக்களை கலைந்து போக சொல்லி கூறினர். இருப்பினும் ஏரியின் பல பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் இறங்கியதால் காவல்துறையினர் கட்டுப்படுத்த முடியாமல் திணறினர்.

[the_ad id=”7250″]

tag: perambalur

gulf tamil news
Leave a Reply

%d bloggers like this: