வேப்பந்தட்டை அருகே மகனை கொலை செய்து நாடகமாடிய பெற்றோர்கள் கைது.

506

வேப்பந்தட்டை அருகே மகனை கொலை செய்து நாடகமாடிய பெற்றோர்கள் கைது.

வேப்பந்தட்டை அருகே மகனை கொலை செய்து நாடகமாடிய பெற்றோர்கள் கைது. வேப்பந்தட்டை அருகே மகனை கொலை செய்து விட்டு நாடகமாடிய பெற்றோர் உள்பட 8 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, பாண்டகபாடி கிராமத்தை சேர்ந்த ராமசாமி-சரஸ்வதி தம்பதியரின் மூத்த மகன் முத்தையா(வயது 30). விவசாயியான இவர், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் சிங்கப்பூரில் வேலை பார்த்தார். பின்னர் அங்கிருந்து சொந்த ஊர் திரும்பி அவர், தான் சம்பாதித்த பணத்தை மதுகுடித்து செலவு செய்ததாக கூறப்படுகிறது. இதனை பெற்றோர் கண்டித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த 27-ந் தேதி, அளவுக்கு அதிகமாக மது குடித்து விட்டு வந்த முத்தையாவுக்கும், அவரது பெற்றோருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பாண்டகபாடி கருப்பையா கோவில் பகுதியில் கழுத்தில் லுங்கியால் இறுக்கிய நிலையில் முத்தையா மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

கோவா ஐஐடி-யில் ரூ.1.12 லட்சம் ஊதியத்தில் வேலை வாய்ப்பு!!

பெரம்பலூர் மாவட்டத்தில் இரு வெவ்வேறு சம்பவங்களில் இரண்டு பேர் பலி.

கழுத்தை இறுக்கி கொலை

இதுகுறித்து கிராம நிர்வாக அதிகாரி சதீஷ் கொடுத்த புகாரின்பேரில், வி.களத்தூர் போலீசார் முத்தையாவின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதுதொடர்பாக முத்தையாவின் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் விசாரணை நடத்தியபோது, சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறில் மனமுடைந்து வீட்டை விட்டு வெளியே சென்ற முத்தையா தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்துள்ளனர்.

8 பேர் கைது

இதனை நம்ப மறுத்த போலீசார், அவர்களிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியபோது முன்னுக்குப்பின் முரணான தகவல்களை தெரிவித்தனர். இதனால், மேலும் சந்தேகமடைந்த போலீசார் மேற்கொண்டு நடத்திய விசாரணையில் முத்தையா வெளிநாட்டில் வேலை பார்த்தபோது அனுப்பிய பணத்திற்கு கணக்கு கேட்டதால் தந்தை-மகனுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் பெற்றோர் மற்றும் அவரது உறவினர்கள் சிலர் சேர்ந்து முத்தையாவை லுங்கியால் கழுத்தை இறுக்கி கொலை செய்தது தெரிய வந்தது.

இதனைத் தொடர்ந்து முத்தையாவின் தந்தை ராமசாமி, தாய் சரஸ்வதி மற்றும் அதே ஊரை சேர்ந்த உறவினர்கள் 6 பேர் என 8 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மகன் என்றும் பாராமல் அவரை உறவினர்களுடன் சேர்ந்து கொலை செய்து விட்டு தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினத்தந்தி
Leave a Reply

%d bloggers like this: