வேப்பந்தட்டை அருகே பெண் தற்கொலை

வேப்பந்தட்டை அருகே பெண் தற்கொலை.

143

[the_ad id=”7250″]

வேப்பந்தட்டை அருகே பெண் தற்கொலை.

வேப்பந்தட்டை அருகே பெண் தற்கொலை. பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள கடம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி(வயது 27). நெல் அறுவடை எந்திரத்தின் டிரைவராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் திருவண்ணாமலை மாவட்டம், ஓமந்தூர் கிராமத்தை சேர்ந்த பிரேமா(19) என்பவருக்கும் கடந்த 6 மாதத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

பெரம்பலூா் மாவட்டத்தில் 30 நிமிடங்கள் தாமதமாக தொடங்கிய பிளஸ் 2 தோ்வு

இந்நிலையில் கணவன்- மனைவி இடையே அவ்வப்போது குடும்ப தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த பிரேமா நேற்று வீட்டில் இருந்த மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தகவலறிந்து அரும்பாவூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிரேமாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் திருமணமாகி 6 மாதங்களே ஆன நிலையில் பிரேமா இறந்துள்ளதால் பெரம்பலூர் வருவாய் கோட்டாட்சியர் சுப்பையா மேல் விசாரணை நடத்தி வருகிறார்.

தினத்தந்தி
Leave a Reply

%d bloggers like this: