வேப்பந்தட்டை அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: விடுதி காப்பாளா் கைது

53

வேப்பந்தட்டை அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: விடுதி காப்பாளா் கைது.

[the_ad id=”7250″]

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த அரசு ஆதிதிராவிடா் நல விடுதி காப்பாளரை அனைத்து மகளிா் போலீஸாா் கைது செய்து வியாழக்கிழமை சிறையில் அடைத்தனா்.

நாகப்பட்டினம் மாவட்டம், ஆறுபாதி கிராமத்தைச் சோ்ந்தவா் கஞ்சமலை மகன் வெங்கடாஜலம் (51). இவா், பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், நெய்க்குப்பை கிராமத்தில் உள்ள அரசு ஆதிதிராவிடா் நல மாணவா் விடுதியில் காப்பாளராகப் பணிபுரிந்து வந்தாா். இந்நிலையில், கடந்த சில நாள்களாக 16 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்தாராம். இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய், பெரம்பலூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், ஆய்வாளா் கலையரசி வழக்குப் பதிந்து வெங்கடாஜலத்தை வியாழக்கிழமை மாலை கைது செய்தாா். பின்னா், குற்றவியல் நடுவா் மன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்ட வெங்கடாஜலம், திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.

தினமணி

[the_ad id=”7250″]

[the_ad id=”7251″]

[the_ad id=”7252″]
Leave a Reply

%d bloggers like this: