வேப்பந்தட்டை அருகே கிணற்றில் விழுந்து தாய், மகள் தற்கொலை.

640

வேப்பந்தட்டை அருகே கிணற்றில் விழுந்து தாய், மகள் தற்கொலை.

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே தாயும், மகளும் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டது இன்று (சனிக்கிழமை) தெரியவந்தது.

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், பூலாம் பாடியைச் சேர்ந்த குமார் மனைவி பிரியா (எ) மரியா பிரின்ஸ் (வயது 32). இவர்களுக்கு, தருண் (வயது 13), தனுஷ்கா (வயது 6) ஆகிய குழந்தைகள் இருந்தன. மணிகண்டன் வெளிநாட்டில் வேலைபார்த்து வருகின்றார். இதனால் அவரது தாய் செல்லத்துடன் பிரியா அவர்களது  குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார்.

பெரம்பலூா் மாவட்டத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா உறுதி.

பெரம்பலூர் அமமுக நிர்வாகி கொலை வழக்கில் மேலும் இருவர் கைது.

இந்நிலையில், கடந்த 3 நாள்களாக பிரியா தனது பெண் குழந்தை தனுஷ்காவுடன் காணவில்லையாம். இதையடுத்து, பிரியாவின் உறவினர்கள் வீடு உள்பட பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லையாம். இந்த நிலையில், பூலாம்பாடி கிராமத்தைச் சேர்ந்த ஜெகதீசன் என்பவருக்கு சொந்தமான விவசாய கிணற்றில் ஒரு பெண்ணும், குழந்தையும் இறந்து கிடந்தது சனிக்கிழமை தெரியவந்தது.

தகவலறிந்த அரும்பாவூர் காவல்துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்று, தீயணைப்புத் துறையினரின் உதவியுடன் கிணற்றில் கிடந்த உடல்களை மீட்டனர். இது சம்பந்தமாக மேற்கொண்ட விசாரணையில் காணாமல் போனதாகத் தேடிவந்த பிரியாவும், அவரது குழந்தை தனுஷ்கா என்பது தெரியவந்தது.

இதுகுறித்து வழக்குப் பதிந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Source: dinamani.com
Leave a Reply

%d bloggers like this: