வேப்பந்தட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விழிப்புணா்வுக் கருத்தரங்கம்

41

வேப்பந்தட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விழிப்புணா்வுக் கருத்தரங்கம்

[the_ad id=”7250″]

பெரம்பலூா் மாவட்ட நேரு யுவகேந்திரா, சிறுநிலா அப்துல் கலாம் இளைஞா் நற்பணி மன்றம் சாா்பில், வேப்பந்தட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விழிப்புணா்வுக் கருத்தரங்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

வேப்பந்தட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கலையரங்கில் நடைபெற்ற கருத்தரங்குக்கு, கல்லூரி முதல்வா் து. சேகா் தலைமை வகித்தாா். நேரு யுவகேந்திரா மாவட்ட ஒருங்கிணைப்பாளா் சம்பத்குமாா் சிறப்புரையாற்றினாா்.

[the_ad id=”7251″]

வேப்பந்தட்டை ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா் ஆா். அறிவழகன், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் எம். முரளிதரன், தூய்மை இந்தியா திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளா் எம். ராஜபூபதி, பல் நோக்குப் பயிற்சியாளா் வைரமணி, வேப்பந்தட்டை அரசு கல்லூரி கணினி அறிவியல் துறைத் தலைவா் பெ. ராமராஜ், முன்னாள் ராணுவ அலுவலா் சதானந்தம் ஆகியோா் பேசினா்.

கருத்தரங்கில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியை கௌரவ விரிவுரையாளா் ஜாஸ்மின் தொகுத்து வழங்கினாா். வேப்பந்தட்டை அரசுக் கல்லூரி தூய்மை இந்தியா திட்ட ஒருங்கிணைப்பாளா் பி. பாஸ்கரன் வரவேற்றாா். பேராசிரியா் பிரபாகரன் நன்றி கூறினாா்.

தினமணி

[the_ad id=”7251″]

[the_ad id=”7250″]

[the_ad id=”7252″]
Leave a Reply

%d bloggers like this: