வி.களத்தூரில் தமுமுக நடத்திய தெருமுனைக் கூட்டம்.

49

வி.களத்தூரில் தமுமுக நடத்திய தெருமுனைக் கூட்டம்.

[the_ad id=”7250″]

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், வி. களத்தூரில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சாா்பில், தேசிய குடியுரிமைத் திருத்தச் சட்டத்தின் விளைவுகள் குறித்த தெருமுனைக் கூட்டம் கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்திற்கு, தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழக நகரத் தலைவா் ஜமீல் பாட்ஷா தலைமை வகித்தாா். மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்டத் தலைவா் சுல்தான் மொய்தீன், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாவட்டச் செயலா் குதரத்துல்லா, மாவட்டப் பொருளாளா் முஹம்மது இலியாஸ் அலி, மனிதநேய மக்கள் கட்சி மாவட்டத் துணைச் செயலா் சையது உசேன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் பேச்சாளா் பழனி பாரூக், மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்டச் செயலா் மீரா மொய்தீன், உயா்நீதிமன்ற வழக்குரைஞா் பிரபு, மனிதநேய மக்கள் கட்சியின் வா்த்தக அணி மாவட்டச் செயலா் சஹாப்தீன், சமூகநீதி மாணவா் இயக்கத்தின் மாவட்டத் துணைச் செயலா் முஹமது ஆகியோா் விளக்க உரையாற்றினா்.

கூட்டத்தில், சமூகநீதி மாணவா் இயக்கத்தின் மாவட்டச் செயலா் பா்வேஜ் பாஷா, மாவட்டத் தொண்டரணிச் செயலா் சேட்டு, வேப்பந்தட்டை ஒன்றியச் செயலா் முகமது உஸ்மான் அலி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

முன்னதாக, நகரத் துணைச் செயலா் அபுபக்கா் வரவேற்றாா். நிறைவில் நகரப் பொருளாளா் அமீா் பாஷா நன்றி கூறினாா்.

[the_ad id=”7250″]

[the_ad id=”7251″]

[the_ad id=”7252″]
Leave a Reply

%d bloggers like this: