விவசாயத் தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க கடிதம்.

75

விவசாயத் தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க கடிதம்.


விவசாயத் தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க கடிதம். கொரோனா நோய்த் தொற்று பாதிப்பினால் வேலை இழந்துள்ள விவசாயத் தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க வழிறுத்தி அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் பெரம்பலூர் மாவட்ட செயலாளர் இரமேஷ் முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில் கூறியுள்ளாதவது:

கொரோனா விஷக் கிருமியின் பரவலுக்கு உலகமே உள்ளாகியுள்ள நிலையில் நமது தமிழ்நாடும் கடுமையான நிலைமைகளை எதிர்கொண்டு வருகிறது. இந்தியாவில் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் உள்ளது. ஆனால் தமிழகத்தின் பாதிப்புக்குரிய விதத்தில் மத்திய அரசின் நிதிப்பகிர்வு நமக்கு இல்லை என்ற வருத்தத்துடன் இந்த கடிதத்தை தங்களுக்கு எங்கள் சங்கத்தின் சார்பில் அனுப்புகின்றோம்.

மேலும் இருவருக்கு கரோனா உறுதி.

அதிகபட்சமான உழைப்பாளிகள் இந்தியாவில் கிராமங்களில் உள்ள விவசாயக் கூலித் தொழிலாளர்கள்தான்.

இந்தியாவில் 25 கோடி கூலித்தொழிலாளர்கள் என்றால்,அதில் தமிழ்நாட்டில் 1 கோடிக்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர்.  இந்த மக்களுக்கு கொரோனா விஷக்கிருமி நோயிலிருந்து இவர்களை பாதுகாப்பதுடன் அன்றாட வயிற்றுப்பசியிலிருந்தும் வறுமையின் கொடுமையிலிருந்தும் இம் மக்களை மத்திய-மாநில அரசுகள் பாதுகாத்திட வேண்டும்.

மத்திய அரசு விவசாயத்தொழிலாளர்களுக்கு 13 கோடிப்பேர்களுக்கு ஜாப்கார்டு (MNRGEA) வழங்கியுள்ளது. இந்த உழைப்பாளிகளுக்கு மத்திய அரசு எந்த நிவாரணங்களையும் வழங்கவில்லை. ஆனால், மூன்றாவது கட்ட ஊரடங்கை மே மாதம் 3.ம் தேதிவரை தற்போது
நீட்டிப்பு செய்து இருக்கிறார்கள்.

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் 2020-21 ஆம் ஆண்டுக்கு *மகாதேவு வேலைத்திட்ட தொழிலாளர்களுக்கு  தினக்கூலியை ரூ.20 உயர்த்தியுள்ளோம் , இதன் மூலம்  தினம் ரூ.20 வீதம் 100 நாள்களுக்கு ரூ.2 ஆயிரம் கிடைக்கும்  இது தான் நூறு நாள் கூலித்தொழிலாளர்களுக்கு நிவாரணம் என்கிறார் மத்திய நிதியமைச்சர்.

இந்த அறிவிப்பு என்பது  கொக்கு தலையில் வெண்ணெய் வைத்து மீன் பிடிப்பதைப் போல் , எந்த ஆண்டும் முழுமையாக நூறு நாட்கள் வேலையும், சட்டக் கூலியும் தந்ததில்லை. வேறெப்படி ரூ.2000/ ம் கிடைக்கும்.

மொத்தத்தில் மத்திய அரசு எதையும் செய்ய தயாரில்லை.

இது பாரபட்சமானது என்கிற அடிப்படையில் எங்களது அகில இந்திய அமைப்பும், மாநில அமைப்பும் மத்திய அரசை அணுகுவது என்று முடிவு செய்துள்ளோம்.

தமிழக அரசின் சார்பில் தாங்கள் மார் 23 ஆம் தேதி ஊரடங்கை அறிவித்து கொரோனா பாதிப்புக்கான பல நிவாரணங்கள் குறித்து அறிவிப்பை வெளியிட்டீர்கள். அடுத்த இரண்டாம் கட்ட அறிவிப்பை 21 நாள் ஊரடங்கு என்ற மத்திய அரசின் அறிவிப்பை ஏற்று வெளியிட்டீர்கள். இப்போது மூன்றாம் கட்ட ஊரடங்கு அறிவிப்பும் வெளியாகி இருக்கிறது.

இது நோய்த் தொற்றை தடுக்க தேவைதான். அதை அரசு செய்கின்றபோது,அதனை ஏற்று அரசுடன் நாங்களும் துணை நிற்போம்.

ஊரடங்கை அமல்படுத்துகிற பொழுது ஏழைகளின் பசித்த வயிறும் அடங்க வேண்டும்.  அதற்கு தாங்கள்  போதிய வழிகாட்டல்களையும் நிவாரணங்களையும் வழங்கிட வேண்டும். ஒவ்வொரு நாளையும் கடக்கும் போதும் மரணத்தை நோக்கி ,கிராமப்புற உழைப்பாளிகள் ஆழமாக தள்ளப்பட்டு கொண்டிக்கிறார்கள். எனவே தமிழக அரசு கூடுதலான நிதியை மத்திய அரசிடமிருந்து கேட்டுப்பெறுவதில் உறுதியாக இருந்துகொண்டே தமிழக கூலித் தொழிலாளர்களை பாதுகாத்திட கீழ்க்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுமாய் எங்கள் அமைப்பின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

தங்களின் முதல் அறிவிப்பில் 100 நாள் வேலைத்திட்ட தொழிலாளர்களுக்கு 2 நாள் சம்பளம் ரூ.458 வழங்கப்படும்.மார்ச் மாதத்தில் வேலை செய்த தொழிலாளர்களுத்தான் இது கிடைக்கும் என்று அறிவித்திருந்தீர்கள். 18 நாள்கள் கழித்துத்தான் அது கூட இப்போது அமலுக்கு வருகிறது. இப்போது இரண்டாம் கட்டம் முடிந்து  மூன்றாம் கட்ட ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மொத்த நாள்கள் 45ஐ தாண்டும் நிலையில் வேலையும் இல்லாமல் கூலியும் இல்லாமல்  பட்டினியால் சாகும் நிலை உருவாகும்.

பட்டினி சாவை தவிர்த்திட கிராமப்புற, பேரூர் பகுதியில் உள்ள விவசாயத் தொழிலாளர்கள் குடும்பங்களுக்கு நிவாரணம் ரூ.5000/ ம் வழங்கிடுக!

நூறு நாள் வேலைத் திட்டத்தில் ஜாப்கார்டு வைத்துள்ள அனைத்துத் தொழிலாளிகளுக்கும் ஊரடங்கால் பாதிக்கப்படும் நாட்களை கணக்கிட்டு வேலை இழப்பு நாட்களாக அறிவிப்பு செய்து சட்டக் கூலியை முழுமையாக வழங்க கோருகிறோம்.

  • தற்போது நிறைவடைந்துள்ள 21 நாட்களுக்கும் உடனே *மகாதேவு திட்டத்தில் கூலியை உடனடியாக வழங்க கோருகிறோம்.
  • காலம்கடந்த உதவி மரணத்திற்குப்பின் செய்யும் வைத்தியத்தை போலாகும். எனவே கூடுதல் பணியாளர்கள் உதவியுடன் காலத்தில் இவைகளை ஏழைகளுக்கு வழங்கிட வேண்டும்.
  • முதியோர் பென்சன் வாங்குவோருக்கும் முதியோர் பென்சன் கிடைக்காத 60 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கும் இந்த நிவாரணம் வழங்கிட வேண்டும்.
  • நுண் நிதி கடன் அனைத்தையும் ரத்து செய்திட வேண்டும்.
  • உழவர் சந்தைகளை உடன் திறந்து மலிவு விலையில்  காய்கறிகள் கிடைப்பதை உத்தரவாதம் படுத்த வேண்டும். – பொதுவிநியோகக் கடைகள் மூலமாக அனைத்து மளிகைப் பொருள்களும் இலவசமாக வழங்கிடுக!
  • ஊரடங்கு இருப்பதினால் கிராமப்புற நோயாளிகளுக்கு நடமாடும் மருத்துவமனை மூலம் மருத்துவ உதவி செய்திட வேண்டும். -விலைவாசியை உடன்கட்டுப்படுத்துவதுடன்,சரக்கு இரயில்கள் மூலமாக அனைத்து அத்தியாவசியப் பொருட்களும் அருகாமை நகரங்களுக்கு கொண்டு வருக!
  • மே மாத கிராமசபை கூட்டத்தில் இந்த நிலைமைகளை எதிர்கொள்வதற்கு விரிவான தீர்மானத்தை நிறைவேற்றிட வேண்டும்.  இதற்கு உள்ளாட்சி மன்ற அமைப்புகளுடன் சமூகத்தொர்ண்டு அமைப்புகளையும் இணைத்து திட்டமிட வேண்டும்.
  • கோடை காலம் துவங்கிவிட்டதினால் குடிநீர் தட்டுப்பாடு இல்லாமல் தடுத்து பாதுகாக்கப்பட்ட குடிநீர் அனைவருக்கும் கிடைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




Leave a Reply

%d bloggers like this: