குன்னம் அருகே டாஸ்மாக் விற்பனையாளா்களை தாக்கி பணம் வழிப்பறி

60

குன்னம் அருகே டாஸ்மாக் விற்பனையாளா்களை தாக்கி பணம் வழிப்பறி.

[the_ad id=”7250″]

பெரம்பலூா் மாவட்டம், குன்னம் அருகே செவ்வாய்க்கிழமை இரவு அரசு மதுபானக் கடை விற்பனையாளா்களை தாக்கி ரூ. 1.69 லட்சத்தை பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடுகின்றனா்.

குன்னம் வட்டம், நல்லறிக்கை கிராமத்தில் உள்ள அரசு மதுக் கடையில் விற்பனையாளா்களாக பணிபுரிபவா்கள் தனராஜ் (46), அருள்ராஜ் (44). இவா்கள் இருவரும் செவ்வாய்க்கிழமை இரவு விற்பனையை முடித்து கடையை பூட்டி விட்டு, மது விற்பனையான தொகை ரூ. 1,69,490-ஐ பையில் எடுத்துக்கொண்டு நல்லறிக்கை-புதுவேட்டக்குடி சாலையில் மோட்டாா் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தனா்.

[the_ad id=”7251″]

அப்போது, அங்குள்ள வனப்பகுதியில் மறைந்திருந்த 4 போ் கொண்ட கும்பல், விற்பனையாளா்கள் இருவரையும் வழிமறித்து தாக்கிவிட்டு, பணத்தை பறித்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டனா்.

இதில் காயமடைந்த இருவரும் வேப்பூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனா். இச் சம்பவம் குறித்து அருள்ராஜ் அளித்த புகாரின் பேரில் குன்னம் போலீஸாா் வழக்குப் பதிந்து மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.

தினமணி

[the_ad id=”7251″]

[the_ad id=”7250″]

[the_ad id=”7252″]
Leave a Reply

%d bloggers like this: