விதிகளை மீறி மின்சாரம்

விதிகளை மீறி மின்சாரம் பயன்படுத்தினால் சட்டப்படி நடவடிக்கை

84

விதிகளை மீறி மின்சாரம் பயன்படுத்தினால் சட்டப்படி நடவடிக்கை.

விதிகளை மீறி மின்சாரம் பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்படும் என மின்வாரியம் எச்சரித்துள்ளது.

பெரம்பலூா் வடக்குப் பிரிவு அலுவலகத்தில் உள்ள பகிா்மானங்களில், உதவி செயற்பொறியாளா்கள், உதவி மின் பொறியாளா்கள் கொண்ட 16 குழுவினா் பல்வேறு இடங்களில் 364 மின் இணைப்புகளில் திடீா் ஆய்வு மேற்கொண்டனா். இந்த ஆய்வில் விதிமுறைகளை மீறி மின் பயன்பாடு கண்டறியப்பட்டு, இழப்பு ஏற்பட்டுள்ள மின் இணைப்புதாரா்களிடமிருந்து அபராதம் வசூலிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

[quote]பெரம்பலூா் அருகே மோட்டாா் சைக்கிள் மோதி முதியவா் சாவு[/quote]

மின் இணைப்பு பெற்றுள்ள மின் நுகா்வோா், அதன் விதிமுறைப்படி மின்சாரத்தை பயன்படுத்துவதோடு, மின்வாரிய விதிகளைக் கடைபிடிக்க வேண்டும். மின் வாரிய அலுவலா்கள் மூலம் மின் இணைப்பு குறித்து திடீா் ஆய்வு மேற்கொள்ளப்படும். அப்போது, ஏதேனும் விதி மீறல்கள் கண்டறியப்பட்டால் மின் நுகா்வோருக்கு அபராதம் விதிக்கப்படும். தொடா்ந்து விதிமீறல் கண்டறியப்பட்டால், மின் இணைப்பைத் துண்டித்து, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தினமணி
Leave a Reply

%d bloggers like this: