விசுவக்குடி ஜல்லிக்கட்டு 2020

விசுவக்குடியில் 400க்கும் அதிகமான காளைகளுடன் நடைபெற்ற  ஜல்லிக்கட்டு

65

விசுவக்குடியில் 400க்கும் அதிகமான காளைகளுடன் நடைபெற்ற  ஜல்லிக்கட்டு

பெரம்பலூர் மாவட்டம், விசுவக்குடி கிராமத்தில் 400க்கும் அதிகமான காளைகளுடன் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. ஊரின் வயல் வெளிப்பகுதியில் ஜல்லிக்கட்டுக்கான வாடிவாசல் அமைக்கப்பட்டு விழா ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. முன்னதாக கால்நடை மருத்துவர்கள் ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ளும் காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்தனர். தகுதியான காளைகளை தேர்வு செய்யப்பட்டு டோக்கன் வழங்கினர். இதேபோல் மருத்துவர்கள் மாடுபிடி வீரர்களின் உடல் தகுதி சான்றுகளையும் ஆய்வு செய்தனர்.

பின்னர் ஜல்லிக்கட்டை மாவட்ட வருவாய் அதிகாரி ராஜேந்திரன் தொடங்கி வைத்தார். இதில் வருவாய் கோட்டாட்சியர் சுப்பையா, மாவட்ட போலீஸ் துணை சூப்பிரண்டு கிரிதர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

வாடிவாசலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டது. இதில் ஆத்தூர், சேலம், தம்மம்பட்டி, மல்லியகரை, வீரகனூர், கெங்கவல்லி, தொண்டமாந்துறை, அன்னமங்கலம், விசுவக்குடி, சமயபுரம் உள்ளிட்ட ஊர்களில் இருந்து 464 காளைகள் கலந்து கொண்டது.

இதில் மாடுபிடி வீரர்கள் 270 பேர் கலந்துகொண்டு காளைகளை அடக்கினர். அப்போது பார்வையாளர்கள் மாடத்தில் இருந்து பார்வையாளர்கள் கைதட்டி உற்சாகப்படுத்தினர். மாடுகளை பிடித்த வீரர்களுக்கு கட்டில், மிக்ஸி, சில்வர் பாத்திரங்கள், வெள்ளி காசுகள், ரொக்கமாகவும் பரிசுகளாக வழங்கப்பட்டது. அது போல காளையர்களின் கையில் அகப்படாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசு வழங்கப்பட்டது.

ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் சுமார் 20 பேர் லேசான காயமடைந்தனர். அவர்களுக்கு அங்கிருந்த மருத்துவ குழுவினர் முதலுதவி சிகிச்சை அளித்து வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். மேலும் இவ்விழாவில் பெரம்பலூர் மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து திரளான பார்வையாளர்கள் கலந்து கொண்டனர்.

இந்த ஜல்லிக்கட்டு திருவிழாவை கல்லாறு தொலைக்காட்சி நேரலையில் ஒளிபரப்பு செய்தது. அதை Youtube வழியாக 2000-ற்கும் அதிகமானோர் பார்த்தனர். கீழுள்ள இணைப்பின் மூலம் விசுவக்குடி ஜல்லிக்கட்டு காணலாம்.

[embedyt] https://www.youtube.com/watch?v=o4qThh0iaNc[/embedyt]

 
Leave a Reply

%d bloggers like this: