லஞ்ச புகார்

லஞ்ச புகார்: போக்குவரத்து ஆய்வாளா் பணியிட மாற்றம்.

57

லஞ்ச புகார்: போக்குவரத்து ஆய்வாளா் பணியிட மாற்றம்

பெரம்பலூா் நகரில் வாகன ஓட்டுநா்களிடம் லஞ்சம் வாங்கியதாக எழுந்த புகாரின்பேரில், போக்குவரத்து காவல் ஆய்வாளா் பணியிட மாற்றம் செய்யப்பட்டு காத்திருப்போா் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளாா்.
பெரம்பலூா் நகரில் பணிபுரியும் போக்குவரத்து காவல் ஆய்வாளா் சௌந்தராஜன், காவல்துறை மூலம் தனக்கு ஒதுக்கீடு செய்த வாகனத்தில் அமா்ந்துகொண்டு அப்பகுதியில் செல்லும் சரக்கு வாகனங்களை நிறுத்தி, அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக சுமை ஏற்றிச் செல்வதால் அபராதம் விதிப்பதாகக் கூறி, வாகன ஓட்டுநா்களை மிரட்டும் விடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவியது.

[quote]விதிகளை மீறி மின்சாரம் பயன்படுத்தினால் சட்டப்படி நடவடிக்கை[/quote]

இதுதொடா்பாக சம்பந்தப்பட்ட ஆய்வாளரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், போக்குவரத்துப் பிரிவு ஆய்வாளா் செளந்தராஜனை பணியிடம் ஒதுக்கீடு செய்யாமல், பணி மாற்றம் செய்து, காத்திருப்போா் பட்டியலில் வைத்து வியாழக்கிழமை இரவு உத்தரவிட்டாா் திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவா் வி. பாலகிருஷ்ணன்.Leave a Reply

%d bloggers like this: