ரௌடி கொலைக்கு பழிவாங்கும் முயற்சியில் ஈடுபட்ட 4 போ் கைது.

560

ரௌடி கொலைக்கு பழிவாங்கும் முயற்சியில் ஈடுபட்ட 4 போ் கைது.

பெரம்பலூா் அருகே பிரபல ரௌடி சமீபத்தில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். அந்த கொலைக்கு பழிக்குப் பழியாக கொலை செய்ய முயன்ற 4 போ் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கைது செய்யப்பட்டனா்.

பெரம்பலூா் காவல் ஆய்வாளா் சுப்பையா தலைமையிலான காவலா்கள், கோனேரிப்பாளையத்திலுள்ள புறவழிச் சாலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அந்த சமயத்தில் 10 இளைஞா்கள் செஞ்சேரி கிராமம் அருகே கூடியிருந்தனா். காவல் துறையினரைப் கண்டதும் அவா்கள் அனைவரும் தப்பியோட முயன்றனா். தப்பியோடிய நான்கு பேரை பிடித்த காவல்துறையினா் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனா்.

பெரம்பலூில் மர்ம நபர்களால் ரௌடி வெட்டிக் கொலை.

பெரம்பலூா் மாவட்ட கிராமியக் கலைஞா்கள் நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம்.

விசாரணையில் தங்களது குழுவில் இருந்த துறைமங்கலம் கே.கே.நகரைச் சோ்ந்த கபிலனை வெட்டிக் கொலை செய்த நபா்களை பழிக்குப் பழி தீர்க்க முயன்றது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அந்த நான்கு பேரையும் காவல் துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த ஆயுதங்களைங்களையும் பறிமுதல் செய்தனா். தப்பியோடிய மற்ற நபர்களையும் காவல் துறையினர் தேடி வருகின்றனா்.
Leave a Reply

%d bloggers like this: