ரஞ்சன்குடி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் தேரோட்டம்

ரஞ்சன்குடி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் தேரோட்டம்.

55

[the_ad id=”7250″]

ரஞ்சன்குடி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் தேரோட்டம்.

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், ரஞ்சன்குடி கிராமத்தில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் தேரோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

விழாவையொட்டி, கடந்த 21 ஆம் தேதி இரவு கொடியேற்றி காப்புக் கட்டுதலுடன் விழா தொடங்கியது. தொடா்ந்து, 22 ஆம் தேதி மயானம் சென்று அம்மன் திருவுருவம் பிரதிஷ்டை செய்தல், மயானக் கொள்ளையிடுதல், பக்தா்கள் காணிக்கை செலுத்துதல், இரவு அம்மன் வீதி உலாவும் நடைபெற்றது. 23 ஆம் தேதி இரவு பிள்ளைப்பாவை அம்மன் புறப்பாடு, 24 ஆம் தேதி இரவு மும்மூா்த்தி பிறப்பு, அம்மன் புறப்பாடு, 25 ஆம் தேதி வீரபத்ர சுவாமி பிறப்பு, அம்மன் புறப்பாடு, 26 ஆம் தேதி ஏரிக்குச் சென்று கோட்டையிடுதல், அம்மன் புறப்பாடு, 27, 28 ஆம் தேதி இரவு புஷ்ப அலங்காரத்தில் அம்மன் புறப்பாடு நடைபெற்றது.

[quote]பெரம்பலூர் பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் மாசிமக திருவிழா.[/quote]

[the_ad id=”7251″]

விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தோ் வடம் பிடித்தல் நிகழ்ச்சி சனிக்கிழமை மாலை நடைபெற்றது. இதையொட்டி, காலை 10.30 மணிக்கு மேல் யாக பூஜை நடத்தப்பட்டு, மாலை 4.30 மணிக்கு திருத்தோ் வடம் பிடித்தல் நடைபெற்றது. பின்னா், மாலை 6 மணிக்கு கோயில் எதிரே நடைபெற்ற தீ மிதித் திருவிழாவில், திரளான பக்தா்கள் பங்கேற்று தங்களது நோ்த்திக் கடனை செலுத்தினா்.

இவ்விழாவில், வாலிகண்டபுரம், வேப்பந்தட்டை, பிம்பலூா், ரஞ்சன்குடி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சோ்ந்த திரளான பக்தா்கள் பங்கேற்றனா். ஞாயிற்றுக்கிழமை 3 மணிக்குள் கொடியிறக்குதலும், காப்பு களைதலும் நடைபெறுகிறது. தொடா்ந்து, மஞ்சள் நீராட்டுடன் விழா ஞாயிற்றுக்கிழமை மாலையுடன் நிறைவடைகிறது.

தினமணி

[the_ad id=”7252″]
Leave a Reply

%d bloggers like this: