மோட்டார் சைக்கிள் விபத்தில் காயமடைந்த பெண் மரணம்.

மோட்டார் சைக்கிள் விபத்தில் காயமடைந்த பெண் மரணம்.

320

மோட்டார் சைக்கிள் விபத்தில் காயமடைந்த பெண் மரணம்.

perambalur news: Woman killed in motorcycle accident.

நேற்று முன்தினம் இரவு சத்திரமனை அருகே நடந்த மோட்டார்  சைக்கிள் விபத்தில் காயமடைந்த பெண் மரணமடைந்தார். எசனையைச் சேர்ந்த அசோகன் (வயது 56). இவர் நேற்று முன்தினம் இரவு தனது மனைவி பரமேஸ்வரியுடன் செட்டிகுளத்திற்கு சென்று திரும்பும் போது சத்திரமனை அருகே வந்த போது எதிரே வந்த பைக் மோதியது.

விபத்தில் காயம் அடைந்த அசோகன் தம்பதி மற்றும் மோதிய மோட்டார் பைக் ஓட்டிவந்த சந்துரு ஆகிய மூன்று பேரையும் பெரம்பலூர் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

அங்கன்வாடி மையங்கள் மூலமாக கணக்கெடுப்பு பணி.

பெரம்பலூாில் குற்றவாளிகளைப் பிடிக்க தனிப்படைகள்.

பிறகு உயர் சிகிச்சைக்காக பரமேஸ்வரி திருச்சி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் நள்ளிரவில்  உயிரிழந்தார்.

இது குறித்து அசோகன் பெரம்பலூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததை தொடர்ந்து காவல் ஆய்வாளர் சுப்பையா வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.

tag: perambalur

gulf tamil news
Leave a Reply

%d bloggers like this: